hello madras mobile banner 1200x300

கன்னியாகுமரி பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் மழைநீர் செல்வதற்கு வழிவகை செய்ய கோரிக்கை…

கன்னியாகுமரி – கன்னியாகுமரி பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகள் உள்ளன. அதில் 18வது வார்டில் கலைஞர் குடியிருப்பு என்ற பகுதியில் சுமார் 300 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கு மழை நீர் வந்தால் வெளியே போவதற்கு வழியில்லை, பலமுறை ஊர்மக்கள் பேரூராட்சி நிர்வாகத்தில் புகார் அளித்தும் பேரூராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலை நீடித்தால் கொசுக்களால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. சிறு குழந்தைகள் பெரியவர்கள் நோயில் அகப்படுவார்கள். குரோனா நோயின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் மழை நீர் தேங்கி இருப்பதால் நோயின் தாக்கம் அதிகமாகும். ஆகவே பேரூராட்சி நிர்வாகம் தலையிட்டு உடனடியாக மழைநீர் கசிந்து செல்வதற்கு வழிவகை எடுத்து தருமாறு ஊர் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »