hello madras mobile banner 1200x300

கதவை உடைத்து பணம் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு வலை.

விக்கிரவாண்டி அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து பணம் திருட்டு .மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர் .
திண்டிவனம் வட்டம் நாகந்துார் கிராமத்தை சேர்ந்தவர் பட்டாபி ,77: விவசாயி. நேற்று முன்தினம் இரவு தனது மனைவி வரலட்சுமி,70 யுடன் விழுப்புரத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவீடு வந்து படுத்து துாங்கியுள்ளனர். காலையில் எழுந்து பார்க்கும் போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் பீரோவின் லாக்கரில் இருந்த ரொக்க பணம் ரூபாய் 10 ஆயிரம் மற்றும் லைசென்ஸ்கள் காணாமல் போயிருந்தது. இது பற்றி பெரியதச்சசூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர் . 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »