hello madras mobile banner 1200x300

கடமலை மயிலை ஒன்றியத்தில் ஐந்தாம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம்…

ஆண்டிபட்டி – தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலை மயிலை ஒன்றியத்தில் அனைத்து ஊர்களிலும் கொரோனா ஐந்தாம் கட்ட தடுப்பூசி முகாம் மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவின் பேரில் நடைபெற்றது. இம்முகாமில் ஏராளமான பொதுமக்கள் இதுவரை தடுப்பூசி செய்து கொள்ளாதவர்கள் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசி போடுபவர்கள் தடுப்பூசி  போட்டுக்கொண்டார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கஜேந்திரன், வட்டார மருத்துவர் கலாவதி மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவ அலுவலர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், அந்தந்த பகுதி ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள் மருத்துவ முகாமில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »