hello madras mobile banner 1200x300

கடமலை மயிலை ஒன்றியத்தில் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து மற்றும் கருத்தாய்வு கூட்டம்…

வருசநாடு – வேர்ல்டு விஷன் இந்திய மயிலாடும்பாறை வட்டார வளர்ச்சி திட்டத்தின் மூலமாக கடமலை மயிலை ஒன்றியத்திற்குட்பட்ட 94 கிராமங்களில் இருந்து 60 தன்னார்வ பணியாளர்களுக்கு கடமலைக்குண்டு தனியார் திருமண மண்டபத்தில் கருத்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறு டேனியல் எமர் சியா சாம்பசிவராவ் வேர்ல்டு விஷன் இந்திய தலைமை அலுவலகத்தில் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டு குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுகளை கண்டறிந்து நீக்குவது பற்றி எடுத்துரைத்தனர். இந்நிகழ்ச்சியை வேர்ல்டு விஷன் இந்திய மயிலாடும்பாறை வட்டார வளர்ச்சி திட்ட மேலாளர் ஜெசுகரன் தங்கராசு மற்றும் பணியாளர்கள் பாலமுருகன் யோவான் ஜெயபால் ஜான் ஜோதி விருமாண்டி டேனியல் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர் மற்றும் நிகழ்ச்சிகளில் சிறப்புரையாற்றினர். வருகை தந்த அனைவருக்கும் வேர்ல்டு விஷன் இந்திய சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »