hello madras mobile banner 1200x300

கடமலை மயிலை ஒன்றியத்தில் சமூக இடைவெளியின்றி தடுப்பூசி முகாம்

வருஷநாடு கடமலை மயிலை ஒன்றியத்தில் கடமலைக்குண்டு மேலப்பட்டி முத்தாளம் பாறை தங்கம்மாள்புரம் வருஷநாடு ஆகிய ஊராட்சிகளில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களும் வணிகர்களும் பொதுமக்களுக்கும் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் அனைத்து ஊராட்சிகளிலும் இன்று நடைபெற்ற சிறப்பு முகாமில் டோக்கன் முறையில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன் இம்முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டனர். ஆனால் முக கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை பின் பற்றாமலும்  ஆர்வத்தில் மக்கள் கலந்து கொண்டதால் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். மேலும் அனைத்து பொது மக்களுக்கும் தடுப்பூசி 100% தடுப்பூசி செலுத்தும் இலக்கை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்களும் சுகாதார ஆய்வாளர்கள் செவிலியர்களும் கூறுகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »