hello madras mobile banner 1200x300

ஒட்டன்சத்திரம்- காந்திநகரில் மாமன்னர் மருதுபாண்டியர் குருபூஜை விழா மற்றும் தேவர் ஜெயந்தி விழா..

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காந்தி நகரில் மாமன்னர் மருதுபாண்டியர் குருபூஜை விழா மற்றும் தேவர் ஜெயந்தி விழாவினை முன்னிட்டு மாநிலத் தலைவர்  மு.முத்தையா தேவர் ஆலோசனைக்கு இணங்க மாநில துணை தலைவர் ஆர். ஈஸ்வரன் தேவர் தலைமையில் 59 ஏழை எளிய  பெண்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில்  சிறப்பு விருந்தினராக அ.தி.மு.க நகர இளைஞர் அணி  செயலாளரும், சமூக ஆர்வலருமான எம்.விஜயகுமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் தமிழ்நாடு தேவர் பேரவை மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர்  சந்திரசேகர்  மற்றும் நிர்வாகிகள் கல்யாண பிரபு, மணிகண்டன், சேகர் புவனேஷ் , தர்மராஜ், பிரகதீஷ், மோகன், கார்த்தி , சிவகுமார், சிவமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »