சென்னை 28, அக்டோபர் 2026: ஏஐ+ ஸ்மார்ட்போன் நிறுவனம், தனது தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்மார்ட்போன் மாடல் களின் விலையை நவம்பர் 15, 2026 முதல் ரூ.1,000 முதல் ரூ. 3,000 வரை உயர்த்துவதாக இன்று அறிவித்துள்ளது. நவம்பர் 14 வரை நுகர்வோர் தற்போ தைய விலையிலேயே ஸ் மார்ட்போன்களை வாங்கலாம்.
இந்த விலை உயர்வு ஏஐ+ பல்ஸ் 2 எஃப்இ, பல்ஸ் 2, நோவா 2 5ஜி, நோவா 2 நியோ 5ஜி, நோவா 2 பவர் 5ஜி, நோவா 2 ப்ரோ 5ஜி மற்றும் நோவா 2 அல்ட்ரா 5ஜி ஆகிய மாடல்களின் தேர்ந் தெடுக்கப்பட்ட வேரியன்ட்களுக்குப் பொருந்தும். ஏஐ+ நோவா ஃப்ளிப் 5ஜி ஸ்மார்ட்போனின் விலையில் மாற்ற மில்லை; இது தொடர்ந்து ரூ. 49,999 விலையில் கிடைக்கும்.
உதிரிபாகங்கள் மற்றும் உற்பத்திக்கான மூலப்பொருட்களின் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்த விலை மாற்றம் மேற்கொள் ளப்பட்டுள்ளது.
இந்திய நுகர் வோருக்கு மலிவான விலையில் தொழில் நுட்பம், நம்பகமான செயல் திறன் மற்றும் சிறந்த மதிப்பை வழங்கு வதில் ஏஐ+ ஸ்மார்ட் போன் நிறுவனம் தொடர்ந்து கவனம் செலுத்தும்.
