hello madras mobile banner 1200x300

இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உச்சிமாநாட்டை நாளை புதுதில்லியில் தொடங்கி வைக்கிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி

சென்னை – 2 நவம்பர், 2026 பிரதமர் திரு நரேந்திர மோடி, நாளை (2026 நவம்பர் 2), புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில், மாலை சுமார் 4:30 மணியளவில் இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உச்சிமாநாட்டையும் கண்காட்சியையும் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.

இந்த நான்கு நாள் உச்சிமாநாடு 2026 நவம்பர் 5 வரை நடைபெறும். இந்த உச்சிமாநாட்டின் கருப்பொருள் 'முதலீடு செய்யுங்கள், புதுமையைப் புகுத்துங்கள், ஊக்கமளியுங்கள்' என்பதாகும்.

இந்த உச்சி மாநாட்டில், 40-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள், கொள்கை வகுப்பாளர்கள், முதலீட்டாளர்கள், நிதி நிறுவனங்கள், தொழில்துறைத் தலைவர்கள் உட்பட 130-க்கும் மேற்பட்ட நாடுகளின் பங்கேற்பாளர்கள் கலந்து கொள்கின்றனர். இது தூய்மையான எரிசக்தி முதலீடு, தொழில்துறை ஈடுபாடு, தொழில்நுட்ப ஒத்துழைப்புகள் ஆகியவற்றுக்கான ஒரு உலகளாவிய தளமாகச் செயல்படும். ஆஸ்திரேலியா, டென்மார்க், ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, நார்வே, சுவீடன், இங்கிலாந்து ஆகிய நாடுகள் கூட்டு ஒத்துழைப்பு நாடுகளாக இதில் பங்கேற்கின்றன.

ஆந்திரப் பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், தில்லி, குஜராத், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 13 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள் தங்களின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றல், முதலீட்டு வாய்ப்புகள், உற்பத்தித் திறன்களை இதில் வெளிப்படுத்தவுள்ளன.

Read the full e-paper

Translate »