சென்னை 21, அக்டோபர் 2026: முன்னணி மல்டி-ஸ்பெஷலிஸ்ட் விளை யாட்டு பிராண்டான டெகாத்லான் இந்தியா, தனது நிபுணத்துவ ஓட்டப்பந்தய துணை பிராண்டான கிப்ரன் பை டெகாத்லான்-க்கான விரிவான வணிக உத்தியை இன்று வெளி யிட்டது. 2030ஆம் ஆண்டுக்குள் ஓட்டப் பந்தய விளையாட்டுப் பிரிவில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமான வருவாயை எட்டுவ துடன், ஹை-பெர் ஃபார்மன்ஸ் ரன்னிங் ஷ¨க்கள், ஆடைகள், ஹைட்ரேஷன் பேக்கு கள், டிரெயில் கியர் மற்றும் ஆக்சஸரீஸ் உள்ளிட்ட முழுமை யான தயாரிப்பு போர்ட்ஃபோலியோ மூலம் 50 லட்சத்துக்கும் அதிகமான ஆக்டிவ் ரன்னர்களை சென் றடைவதை நிறுவனம் இலக்காகக் கொண் டுள்ளது.
இந்த விரிவாக்கத் திற்கு மேலும் வேகம் அளிக்கும் வகையில், கிப்ரன் பை டெகாத் ல £ன் இந்த ஆண்டில் தனது ரன்னிங் பிரிவில் 35 புதிய தயாரிப்பு களை அறிமுகப்படுத்து கிறது. இதில் அனைத்து நிலைகளிலுள்ள ரன்னர் களுக்கும் உலகத் தரத் திலான செயல்திறனை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட 17 ஹை-பெர்ஃபார்மன்ஸ் ரன்னிங் ஷ¨க்கள் முக்கிய இடம் பெறு கின்றன. மேலும், எதிர்கால வளர்ச்சியின் வேகத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்துவதற்காக புதிய தயாரிப்புகளின் விரிவான திட்டமும் உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்த அறிவிப்பு இந்தியாவின் விளை யாட்டு கலாச்சாரத்தில் மாற்றம் ஏற்பட்டு வரும் முக்கியமான காலகட் டத்தில் வெளியாகி யுள்ளது. நாடு முழுவதும் ஒழுங்கமைக் கப்பட்ட ரன்னிங் ரேஸ் நிகழ்வுகள் அதிகரித்து வரும் நிலையில், மேம் பட்ட தயாரிப்பு பொறியியல் மற்றும் அர்த்தமுள்ள சமூக ஈடுபாட்டின் மூலம் சந்தை வளர்ச்சியை வலுப்படுத்த கிப்ரன் திட்டமிட்டுள்ளது. ஐஎம்ஏஆர்சி குரூப் தரவுகளின்படி, இந்தி யாவின் ரன்னிங் கியர் சந்தை 2025ஆம் ஆண்டில் யூஎஸ்டி 2.5 பில்லியனில் இருந்து 2026ஆம் ஆண்டில் யூஎஸ்டி 2.7 பில்லிய னாக வளர்ந்துள்ளது. 2034ஆம் ஆண்டுக்குள் இந்த சந்தை யூஎஸ்டி 4.9 பில்லியனை எட்டும் என எதிர்பார்க் கப்படுகிறது.
« ம ம் ப ட் ட குஷனிங், ரெஸ்பான் சிவ் ஃபோம் தொழில் நுட்பங்கள் மற்றும் கார்பன்- இன்ஃப்யூஸ்டு ஃபுட் வேர் போன்ற தொழில் நுட்ப புதுமை களுக்கான அதிகரித்து வரும் தேவையும் டெகாத்லானின் பெர் ஃபார்மன்ஸ் ரன்னிங் போர்ட் ஃபோலியோ வின் வளர்ச்சிக்கு ஆதர வளித்து வருகிறது.
புருனோ அராவ் ஜோ, கண்ட்ரி ஸ்போர் ட்ஸ் லீடர் – ரன்னிங், டெகாத்லான் ஸ்போர்ட்ஸ் இந்தியா, கூறுகையில், “இந்தியா தனது விளையாட்டு பயணத்தில் ஒரு முக்கிய மான கட்டத்தை எட்டி யுள்ளது. ரன்னிங் என்பது ஒரு குறிப் பிட்ட தரப்பினருக்கான ஃபிட்னஸ் செயல்பா டாக இருந்த நிலையி லிருந்து, தற்போது முக்கிய நீரோட்டத்தில் இடம்பெறும் சமூகத் தை மையமாகக் கொண்ட இயக்கமாக வேகமாக வளர்ந்து வருகிறது.
இந்தியாவுக்கான கிப்ரன்-ன் எங்கள் தொலைநோக்கு பார் வை, நாட்டின் ரன்னர் களுக்கான முதல் தேர்வு டெஸ்டினேஷனாக உருவெடுப்பதாகும்.
நாடு முழுவதும் உண்மையான விளை யாட்டு ஆர்வத்தை ஊக்குவிப்பதுடன், மில்லியன் கணக்கான இந்தியர்களின் முழுமை யான நலனை மேம் படுத்தும் வகையில் ரன்னிங்கை தினசரி ஆரோக்கியமான பழக்கமாக மாற்றுவதே எங்கள் நோக்கம்.”
