hello madras mobile banner 1200x300

ஆர்.கே.நகர் பகுதியில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கத்தியால் தாக்கிய பழைய குற்றவாளி கைது.

கொருக்குப்பேட்டை, நேருநகர் மெயின் தெருவில் உள்ள சலூன் கடைக்கு, அப்பகுதியைச் சேர்ந்த நண்பர்களான மதன்குமார் மற்றும் ஊசி (எ) கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சென்று பேசிக் கொண்டிருந்தனர். அப்பொழுது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, வாக்குவாதம் முற்றிய நிலையில், கிருஷ்ணமூர்த்தி அக்கடையிலிருந்து சவரம் செய்யும் கத்தியை எடுத்து, மதன்குமாரை தாக்கி இரத்தக் காயம் ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்றார். அருகிலிருந்தவர்கள் மதன்குமாரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்ததின் பேரில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேற்படி சம்பவம் குறித்து மதன்குமார் கொடுத்த புகாரின் பேரில், H-6 ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

H-6 ஆர்.கே.நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட ஊசி (எ) கிருஷ்ணமூர்த்தி, வ/29, த/பெ.கண்ணன், எம்.ஜி.ஆர்.நக 8வது தெரு, கொடுங்கையூர், சென்னை என்பவரை கைது செய்தனர்.

விசாரணையில் எதிரி ஊசி (எ) கிருஷ்ணமூர்த்தி மீது 2 கொலை முயற்சி, 1 கஞ்சா, 1 வழிப்பறி உட்பட 6 குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட எதிரி ஊசி (எ) கிருஷ்ணமூர்த்தி விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »