hello madras mobile banner 1200x300

அலங்காநல்லூரில் கேஸ் சிலிண்டருக்கு பாடைகட்டி, முட்டி உடைத்து பெண்கள் ஆர்ப்பாட்டம்..

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஏஐடியுசி கட்டிட தொழிலாளர் சங்கம், டாடா மேஜிக் வேன், ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மத்திய அரசின் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை ரத்து செய்யக்கோரி எரிவாயு சிலிண்டருக்கு பாடை கட்டி, பெண்கள் ஒப்பாரி வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு சிபிஐ புறநகர் மாவட்ட செயலாளர் காளிதாஸ் தலைமை தாங்கினார். சிபிஐ ஒன்றிய செயலாளர் குமரேசன், கட்டிட தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் அலெக்ஸ், மகளிரணி வீரலட்சுமி விஜயா, சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும், அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து கண்டன கோஷங்களை எழுப்பி பேருந்து நிலையம் முதல் கேட்டுக்கடை சந்திப்பு வரை ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »