சென்னை, 28 அக்டோபர் 2026: அனைத்து அரசு பொதுத்துறை நிறுவ னங்களில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர் களுக்கு 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவித் துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்ப தாவது;
தொழிலாளர்களின் அயராத உழைப்பு, அர்ப்பணிப்பு, திறன் மிக்க மனிதவளம் மற்றும் அரசின் தொலைநோக்குக் கொள்கைகள் ஆகியவை மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கும், உள்நாட்டு மற்றும் அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்கும் முக்கியப் பங்காற்றுகின்றன.
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச் சிக்கும், பொதுத்துறை நிறுவனங்களின் செயல் பாட்டிற்கும் முக்கியப் பங்களிக்கும் தொழிலா ளர்கள் மற்றும் பணியா ள ர்களின் உழைப்பை யும், அர்ப்பணிப்பையும் அங்கீகரித்து, அவர் களை ஊக்குவிக்கும் வகையில், 2025-26ஆம் ஆண்டிற்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகையை வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் உத்தர விட்டுள்ளார்.
1.இலாபம் ஈட்டி யுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணி புரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர் களுக்கு அந்தந்த நிறுவ னங்களின் ஒதுக்கக் கூடிய உபரித் தொகை யை கணக்கில் கொண்டு 8.33 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
2.தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங் கள், தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் ஆகிய பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத் தில் பணிபுரியும் தகுதி யுடைய ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர் களுக்கு 8.33 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 20 விழுக் காடு மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
3.ஒதுக்கக்கூடிய உபரித் தொகை இல்லாத பொதுத்துறை நிறுவனங்களில் பணி புரியும் “சி” மற்றும் ‘டி’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர் களுக்கு 8.33 விழுக்காடு குறைந்தபட்ச மிகை ஊதியம் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 10 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
4.தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் ஆகிய வற்றில் பணிபுரியும் தகுதியுடைய ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணி யாளர்களுக்கு 8.33 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகை வழங்கப்படும்.
5.தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் தகுதி யுடைய ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர் களுக்கு 8.33 விழுக்காடு மிகை ஊதியம் வழங்கப் படும்.
6.தமிழ்நாடு நுகர்பொருள் வாணியக் கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணி புரியும் தொழிலாளர் களுக்கு ரூ.3,000/கருணைத் தொகையாக வழங்கப்படும். அரசின் இந்த நடவடிக்கை, பொதுத் துறை நிறுவ னங்களில் பணிபுரியும் பணியாளர் கள் மற்றும் தொழிலாளர்கள் மேலும் ஊக்கத்துடன் செயல்படவும், எதிர் வரும் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சி யுடன் கொண்டாடவும் வழிவகை செய்யும். இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.
