hello madras mobile banner 1200x300

அதிக கல்வி கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க கோரி முக்குலத்தோர் புலிப் படை சார்பாக ஆட்சியிரிடம் மனு..

மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் மணிகண்டதேவர் புகார் மனு அளித்த பின் செய்தியாளர்களிடம்…

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி  P. M .T.நகரில் உள்ள பொன்மணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தமிழக சட்டத்திற்க்கு புறம்பாக அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், அப்படி கட்டணம் செலுத்தினாலும் அதற்க்கு எந்த ரசீதும் பள்ளி நிர்வாகம் வழங்க மறுக்கிறது மற்றும்  கட்டணம் செலுத்தாத மாணவர்களை அடித்து துன்புருத்துவதாகவும் கூறப்படுகிறது. அது மட்டும் அல்லாது   அரசு சட்டத்துக்கூட்பட்டு  25 சதவிதம் (RTE ) என்னும் இலவச கல்வியையும் எந்த ஒரு மாணவருக்கும் வழங்காமல் அந்த இட ஒதிக்கீட்டையும் அதிக கட்டணத்துக்கு மாணவர்களை சேர்க்கின்ற பொன்மணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மீது சட்ட படி நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமிநாதன் -யிடம் புகார்மனு கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »