சென்னை 27, அக்டோபர் 2026: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் 2026 அக்டோபர் 26 அன்று நடைபெற்ற பாது காப்புத் தளவாட கொள்முதல் குழு பாது காப்புப் படைகளுக் கான சுமார் ரூ.2,12,000 கோடி மதிப்பிலான பல்வேறு மூலதன கொள்முதல் முன் மொழிவுகளுக்குக் கெ £ள் கை ரீதியிலான நிர்வாக ஒப்புதலை அளித்தது. இந்திய ராணுவத்திற்கு அதி விரைவு வாகனங்கள், தானியங்கி துப்பாக்கி அமைப்பு, துப்பாக்கி சூட்டிற்கு எதிர் தாக்கு தல் நடத்தும் அமைப்பு, இலகுரக பன்னோக்கு ஹெலிகாப்டர்கள், மிக குறுகிய தூரம் கொண்ட வான் பாதுகாப்பு அமைப்பு, ஆளில்லா கண்காணிப்பு விமா னம், ஒருங் கிணைந்த கண்காணிப்பு மற்றும் தாக்குதல் அமைப்பு ஆகியவற்றைக் கொள் முதல் செய்வதற்கு ஒப்புதல் வழங்கப் பட்டது. இந்த அதி விரைவு வாகனங்கள் சவால்மிக்க நிலப்பரப்பு களில் செயல்பாட்டுத் திறன்கள், தளவாட ஆதரவு, இயங்குதிறன் ஆகியவற்றை மேம் படுத்தும். இலகுரக பன்னோக்கு ªஆலிகாப் டர் அமைப்பானது இந்திய ராணுவம், விமானப்படை ஆகிய இரண்டு படையாலும் உளவு, கண்காணிப்பு, போர், வீரர்களை தேடி மீட்பது, மனிதாபிமான உதவி, பேரிடர் நிவாரணம் ஆகியவற் றிக்காக பயன்படுத்தப் படும்.
