hello madras mobile banner 1200x300

பாஜக அரசை கண்டித்து கருப்புக் கொடி ஏந்தி கண்டன போராட்டம்…

ஆண்டிபட்டி – வருஷநாடு கடமலை மயிலை ஒன்றியத்தில் கடமலைக்குண்டு கரட்டுப்பட்டி மயிலாடும்பாறை வருஷநாடு ஆகிய ஊர்களில் மக்கள் விரோத ஜனநாயக விரோத ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் கண்டன போராட்டம் நடைபெற்றது. இதில் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். விவசாயிகளை வஞ்சிப்பது எதிர்த்தும், பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரியும் பொருளாதார சீரழிவு மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தை எதிர்த்தும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் சார்பாக வருஷநாடு பகுதியில் கண்டன போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி கண்டன போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »