hello madras mobile banner 1200x300

நெஞ்சு சளி தொற்று காரணமாக பாஜக மூத்த தலைவர் அத்வானி மருத்துவமனையில் அனுமதி

சென்னை 18, அக்டோபர் 2026: பாஜக மூத்த தலைவரும் முன்னாள் துணைப் பிரதமருமான எல். கே.அத்வானி, நெஞ்சு சளி தொற்று காரண மாக டெல்லி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள் ளார். பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானி (98), தற்போது வயது மூப்பின் காரணமாக டெல்லியில் அவரது வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். கடந்த 1927ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி பிறந்த அத்வானி, கடந்த சில மாதங்களாக வ யது முதிர்வு சார்ந்த பல்வேறு உபாதை களால் அவதிப்பட்டு வருகிறார்.

ஏற்கனவே கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய இவர், நடப்பு ஆண்டு மே மாதத்திலும் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுத் திரும்பினார். இந்த நிலையில், அத்வானிக்கு திடீரென நெஞ்சு சளி தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதை யடுத்து அவர் டெல்லி யில் உள்ள இந்திர பிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு சுமார் 7.30 மணி அளவில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டார். அங்குள்ள நுரையீரல் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ள அவருக்கு, சிறப்பு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை வட்டாரங்கள் வெளி யிட்டுள்ள தகவலில், ‘அத்வானியின் உடல் நிலை தற்போது சீராக உள்ளது; மருத்துவப் பரிசோதனைகள் தொடர்ந்து நடை பெற்று வரும் நிலையில், மருத்துவ குழுவினர் அவரது உடல்நிலை யைத் தொடர்ந்து தீவிரமாகக் கண்கா ணித்து வருகின்றனர்’ என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. மூத்த தலைவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ள தகவல் அறிந்து அரசியல் பிரமு கர்கள் பலரும் அவர் விரைவில் பூரண குண மடைய வாழ்த்து தெரி வித்து வருகின்றனர்.

Read the full e-paper

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »