hello madras mobile banner 1200x300

கழிவுநீர் குழாய் அமைப்பைச்சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் 01.10.2026 முதல் 15 நாட்களுக்குப் போக்குவரத்து மாற்றங்கள்

காசிமேடு சிக்னல் அருகே உள்ள எஸ்.என். செட்டி சாலை மற்றும்
ஜீவரத்தினம் சாலை சந்திப்பில் சேதமடைந்த கழிவுநீர் குழாய் அமைப்பைச்
சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் 01.10.2026 முதல் 15
நாட்களுக்குப் பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் அமல்படுத்தப்படும்.
 எஸ்.என். செட்டி சாலை – ஜீவரத்தினம் சாலை சந்திப்பு வழியாக எண்ணூர்
செல்லும் (வெளியேறும் திசை) பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள்
ஜீவரத்தினம் சாலை வழியாகத் திருப்பி விடப்படும். அங்கிருந்து இடதுபுறம்
திரும்பி, பின்னர் வலதுபுறம் திரும்பி வி.பி. கோவில் தெரு – டி.எச். சாலை – டி.எச்.
சாலை சுங்கச்சாவடி சந்திப்பு வழியாகத் தங்கள் இலக்கை அடைய வேண்டும்.
 எஸ்.என். செட்டி சாலை – ஜீவரத்தினம் சாலை சந்திப்பு வழியாக எண்ணூர்
செல்லும் (வெளியேறும் திசை) இருசக்கர வாகனங்கள் மற்றும் இலகுரக
வாகனங்கள் ஜீவரத்தினம் சாலை வழியாக திருப்பி விடப்படும் அங்கிருந்து
இடதுபுறம் திரும்பி, பின்னர் வலதுபுறம் திரும்பி வி.பி. கோவில் தெரு – டி.எச்.
சாலை வழியாகச் சென்று, டி.எச். சாலை – மெட்ரோ ரயில் (Pillar No.12) அருகே
‘U’ திருப்பம் (U-turn) எடுத்து, இடதுபுறம் பாலகிருஷ்ணா தெருவுக்கு திரும்பி
தங்கள் இலக்கை அடைய வேண்டும்.
 எண்ணூரிலிருந்து எஸ்.என். செட்டி சாலை வழியாக பாரிமுனை நோக்கி
(உள்வரும் திசை) வரும் இருசக்கர வாகனங்கள், இலகுரக வாகனங்கள்,
பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள், எஸ்.என். செட்டி சாலை – பவர் குப்பம்
சந்திப்பு (முஸ்லிம் அடக்கஸ்தலத்திற்கு எதிரே) பகுதியில் உள்ள வெளியேறும்
திசைக்கு (எதிர் திசையில்) திருப்பி விடப்படும்; அங்கிருந்து இடதுபுறம் திரும்பி
எஸ்.என். செட்டி சாலை – காசிமேடு சிக்னல் சந்திப்பு (உள்வரும் திசை) வழியாக
தங்கள் இலக்கை அடைய வேண்டும்.
வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »