சென்னை 18, அக்டோபர் 2026: இந்தியக் கடற்படை யின் முதல் பயிற்சிப் படைப்பிரிவின் கப்பல் களான ஐஎன்எஸ் திர், ஐஎன்எஸ் சுஜாதா, இந்தியக் கடலோரக் காவல் படை கப்பலான சாரதி ஆகியவை, கடல் சார் பயிற்சியின் ஒரு பகுதியாக செஷல்ஸ் சென்றன.
இந்தக் கப்பல்கள், 12 அக்டோபர் 2026 அன்று தொடங்கிய தங்களது பயணத்தை, 15 அக்டோபர் 2026 அ ன்று நிறைவு செய்து, செஷல்ஸில் உள்ள விக்டோரியா துறை முகத்திலிருந்து புறப் பட்டன.
இந்தப் பயணம் தொழில் முறைப் பயிற்சி, திறன் மேம் பாடு, அந்நாட்டு கடற்படையினரு டனான கலந்துரை யாடல் கள் ஆகியவை மூலம், இந்தியா-செஷல்ஸ் இடையே யான நீண்ட காலக் ஒத்துழைப்பை வலுப் படுத்தியது. துறைமுக பயணத் தின் போது, இ ந் திய பயிற்சிப் படைப்பிரி வின் மூத்த அதிகாரியும், கப்பல் களின் கட்டளை அதிகாரிகளும், செஷல்ஸ் பாதுகாப்புப் படையின் தலைமைத் தளபதியான மேஜர் ஜெனரல் மைக்கேல் ரோசெட்டைச் சந்தித் தனர். இரு படைகளுக் கும் இடையிலான நீடித்த ஒத்துழைப்பு குறித்து கலந்துரை யாடல்கள் இடம் பெற்றன.
