hello madras mobile banner 1200x300

கடமலை மயிலை ஒன்றியத்தில் பெற்றோருக்கு தொல்லை கொடுத்த மகன் கைது..

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியம், வருசநாடு ஊராட்சி, ராஜவேல் நகரில் குடியிருந்து கூலி வேலை செய்துவரும் பால்பாண்டி என்பவருடைய மகன் ரதீஷ் குமார் என்பவர் தினந்தோறும் மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் ஊதாரித்தனமாக இருந்துகொண்டு அப்பா அம்மாவுக்கு தொல்லை கொடுத்து அவர்களை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். மேலும் மது வாங்க பணம் இல்லை என்றால் மேலும் பெற்றோர்கள் என்று பாராமல் சித்திரவதை செய்து அசிங்கமான வார்த்தைகளால் பேசி அருகில் உள்ளவர்களுக்கு அதிகமான தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் இவரின் அராஜக செயல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போனதால் பால்பாண்டி என்பவர் அவரது மகன் என்றும் பாராமல் ரதீஷ் குமார் மீது வருஷநாடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் அதன் அடிப்படையில் வருஷநாடு காவல் சார்பு ஆய்வாளர் அருண்பாண்டி வழக்கு பதிவு செய்து ரதீஷ் குமாரை  சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »