காசிமேடு சிக்னல் அருகே உள்ள எஸ்.என். செட்டி சாலை மற்றும்
ஜீவரத்தினம் சாலை சந்திப்பில் சேதமடைந்த கழிவுநீர் குழாய் அமைப்பைச்
சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் 01.10.2026 முதல் 15
நாட்களுக்குப் பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் அமல்படுத்தப்படும்.
எஸ்.என். செட்டி சாலை – ஜீவரத்தினம் சாலை சந்திப்பு வழியாக எண்ணூர்
செல்லும் (வெளியேறும் திசை) பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள்
ஜீவரத்தினம் சாலை வழியாகத் திருப்பி விடப்படும். அங்கிருந்து இடதுபுறம்
திரும்பி, பின்னர் வலதுபுறம் திரும்பி வி.பி. கோவில் தெரு – டி.எச். சாலை – டி.எச்.
சாலை சுங்கச்சாவடி சந்திப்பு வழியாகத் தங்கள் இலக்கை அடைய வேண்டும்.
எஸ்.என். செட்டி சாலை – ஜீவரத்தினம் சாலை சந்திப்பு வழியாக எண்ணூர்
செல்லும் (வெளியேறும் திசை) இருசக்கர வாகனங்கள் மற்றும் இலகுரக
வாகனங்கள் ஜீவரத்தினம் சாலை வழியாக திருப்பி விடப்படும் அங்கிருந்து
இடதுபுறம் திரும்பி, பின்னர் வலதுபுறம் திரும்பி வி.பி. கோவில் தெரு – டி.எச்.
சாலை வழியாகச் சென்று, டி.எச். சாலை – மெட்ரோ ரயில் (Pillar No.12) அருகே
‘U’ திருப்பம் (U-turn) எடுத்து, இடதுபுறம் பாலகிருஷ்ணா தெருவுக்கு திரும்பி
தங்கள் இலக்கை அடைய வேண்டும்.
எண்ணூரிலிருந்து எஸ்.என். செட்டி சாலை வழியாக பாரிமுனை நோக்கி
(உள்வரும் திசை) வரும் இருசக்கர வாகனங்கள், இலகுரக வாகனங்கள்,
பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள், எஸ்.என். செட்டி சாலை – பவர் குப்பம்
சந்திப்பு (முஸ்லிம் அடக்கஸ்தலத்திற்கு எதிரே) பகுதியில் உள்ள வெளியேறும்
திசைக்கு (எதிர் திசையில்) திருப்பி விடப்படும்; அங்கிருந்து இடதுபுறம் திரும்பி
எஸ்.என். செட்டி சாலை – காசிமேடு சிக்னல் சந்திப்பு (உள்வரும் திசை) வழியாக
தங்கள் இலக்கை அடைய வேண்டும்.
வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
