hello madras mobile banner 1200x300

மயிலாப்பூர் பகுதியில் ஒருவரை கட்டையால் தாக்கி, இருசக்கரவாகனத்தில் அழைத்துச் சென்று, கடற்கரை பகுதியில் விட்டுச் சென்ற வழக்கில் ஒருவர் கைது. 1 இருசக்கர வாகனம் பறிமுதல்.

சென்னை, மயிலாப்பூர், வீரபத்திரன் கோவில் தெருவில் வசித்து வரும் மணிகண்டன், வ/25,
த/பெ.ரமேஷ் என்பவர் போதைக்கு அடிமையாகி, கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையில்
சிகிச்சைக்கு மேற்கொண்டு, தற்போது அவரது தாயாருடன் வீட்டில் வசித்து வருவதாகவும், கடந்த
25.09.2026 அன்று இரவு, மயிலாப்பூர் கோலவிழியம்மன் கோவில் தெரு அருகில் உள்ள ஒரு
பூக்கடைக்கு சென்று, தகடு மற்றும் விளக்குகளை கொடுத்து, அதற்கு பதிலாக பணம்
கேட்டதாகவும், அப்போது, பூக்கடையின் உரிமையாளருக்கும், மணிகண்டனுக்கும் இடையே
வாக்குவாதம் ஏற்பட்ட போது, அங்கு வந்த பூக்கடை உரிமையாளரின் உறவினர்களான
கோபாலகிருஷ்ணன் மற்றும் ஜெயசூர்யா ஆகிய இருவரும் சேர்ந்து, மணிகண்டனை தகாத
வார்த்தைகளால் பேசி, கைகளாலும், மரக்கட்டையாலும் தாக்கிவிட்டு, அவரை
இருசக்கரவாகனத்தில் வலுக்கட்டாயமாக ஏற்றிக் கொண்டு, மயிலாப்பூர் பகுதியில் உள்ள
கடற்கரைக்கு அருகே இரத்த காயங்களுடன் மணிகண்டனை இறக்கிவிட்டு, இருவரும் தப்பிச்
சென்றதாகவும், பின்னர் அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல்
தெரிவித்து, தற்போது இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் மணிகண்டன்
உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருவதாகவும், இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட
மணிகண்டனின் தாயார் ஆதிலட்சுமி, பெ/வ.47 என்பவர் E-1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில்
ஆஜராகி, தன் மகனை தாக்கிய கோபாலகிருஷ்ணன் மற்றும் ஜெயசூர்யா ஆகிய இருவர் மீதும்
உரிய நடவடிக்கை எடுக்குமாறு புகார் கொடுத்ததின்பேரில், வழக்குப்பதிவு செய்து போலீசார்
விசாரணை மேற்கொண்டனர்.
E-1 மயிலாப்பூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ
இடத்தில் தீவிர விசாரணை செய்து, மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட எதிரி
கோபாலகிருஷ்ணன், வ/32, G.N. தெரு, மயிலாப்பூர், சென்னை என்பவரை நேற்று (27.09.2026)
கைது செய்தனர். அவரிடமிருந்து குற்ற செயலுக்கு பயன்படுத்திய மரக்கட்டை மற்றும் இருசக்கர
வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட எதிரி கோபாலகிருஷ்ணன் விசாரணைக்குப் பின்னர் நேற்று (27.09.2026)
நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
இவ்வழக்கில் தொடர்புடைய மற்றொரு தலைமறைவு எதிரியை பிடிக்க காவல் குழுவினர்
தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »