சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகளின்படி, சென்னை
உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.செல்வம் இன்று (23.09.2026)
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டு
வரும் பணிகளை பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார்.
மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தின் W.P.(MD) Nos.16485 & 14699 of
2015 மற்றும் W.P. No.3075 of 2017 ஆகிய வழக்குகளில் வழங்கப்பட்டுள்ள
உத்தரவுகள் மற்றும் தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு ஆக்கிரமிப்பு தாவரங்கள் அகற்றுதல்
மற்றும் சுற்றுச்சூழல் மறுசீரமைப்புக் கொள்கை (TNPIPER) ஆகியவற்றின்
அடிப்படையில், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், நீர்வளத்துறை, ஊரக
வளர்ச்சித்துறை உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் கொண்டு சீமை
கருவேல மரங்களை அகற்றும் பணி தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இத்திட்டத்தின் முதற்கட்டமாக, அரசு நிலங்கள், ஆறுகள், கண்மாய்கள்,
கால்வாய்கள், நீர்நிலைகள், அரசு அலுவலக வளாகங்கள் மற்றும் இதர
பொதுநிலங்களில் வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை வேருடன் முழுமையாக
அகற்றி, அவற்றிற்குப் பதிலாக உள்ளூர் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பூர்வீக மர
இனங்களை நடவு செய்து பசுமை வளத்தை மீட்டெடுக்கும் பணிகள் பல்வேறு
துறைகளின் ஒருங்கிணைப்புடன் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கருங்குளம் குளம்,
மீனாட்சிப்பட்டி ஸ்ரீமூலக்கரை, தாமிரபரணி ஆறு, ஆழ்வார்திருநகரி,
கொந்தன்குறிச்சி, உமரிக்கோட்டை, கோரம்பள்ளம் ஆகிய குளங்களில் உள்ள சீமை
கருவேல மரங்கள் அகற்றுப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு, நீர் நிலைகளில்
உள்ள குளங்களின் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றிடவும், குளங்களில் உள்ள
சீமை கருவேல மரங்களை வேருடன் அகற்றிடவும், சீமை கருவேல மரங்களை
அகற்றுவதற்கான போதுமான நிதி ஆதாரம் கிடைத்தவுடன் அனைத்து துறை
அலுவலர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்
ஆகியோர்கள் ஒருங்கிணைந்து சீமை கருவேல மரங்களை வேருடன் அகற்றுவதற்கான
பணி மேற்கொள்ளப்படும் என சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி
ஏ.செல்வம் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மி.பிரபு,
செயற்பொறியாளர், நீ.வ.து, கீழ்தாமிரபரணி மற்றும் கோரம்பள்ளம் ஆறு வடிநிலக்
கோட்டம் தங்கராஜன், உதவி இயக்குநர் (ஊராட்சி) சந்திரசேகரன் மற்றும்
அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
