‘L’Oréal Paris காஸ்டிங் க்ரீம் க்ளாஸ்‘ பண்டிகை கால சிறப்பு லிமிடெட்-எடிஷன் ஹேர் கலர் பேக்கில் இடம்பிடித்த முதல் இந்திய பிராந்திய சின்னத்திரை பிரபலங்களில் இவரும் ஒருவர்.
சென்னை 10 செப்டம்பர் 2026: பண்டிகை காலத்தை முன்னிட்டு L’Oréal Paris ஆனது, ‘காஸ்டிங் க்ரீம் க்ளாஸ்’ (Casting Crème Gloss) ஹேர் கலர் பிரிவில் லிமிடெட்-எடிஷன் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், ‘ஃபில்டர் காபி ப்ரவுன்’ (Filter Kaapi Brown) நிறத்தின் முகமாக நடிகை வினுஷா தேவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வினுஷா தனது இயல்பான நடிப்பினாலும், அன்பான அணுகுமுறையினாலும் தென்னிந்திய மற்றும் தமிழ் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவர். இவரை முதன்மைப்படுத்தி அறிமுகமாகியுள்ள ‘ஃபில்டர் காபி ப்ரவுன்’, கலாச்சாரப் பெருமிதத்துடன் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் புதிய தலைமுறைக்கான அடையாளமாக விளங்குகிறது. இது ஃபில்டர் காபியின் அடர்ந்த நிறத்தைக் கொண்டாடுவதுடன், இப்பிராந்திய மக்களின் அன்றாட வாழ்க்கையிலும் பண்டிகைகளிலும் நீங்கா இடம்பெற்றுள்ள பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கிறது.
ஒரு சர்வதேச அழகுசாதன நிறுவனம், இந்தியாவின் பண்டிகைகளுக்கென்றே பிரத்யேகமாக ஹேர் கலர் மாடல்களை அறிமுகம் செய்வது இதுவே முதல்முறையாகும். இந்த ஹேர் கலர்களின் நிறங்கள், அவற்றின் பெயர்கள் மற்றும் அட்டைப்படங்களில் (Pack) இடம்பெற்றுள்ள பிராந்திய பிரபலங்கள் என அனைத்தும் இந்திய கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் முழுமையாகப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்தத் தயாரிப்புத் தொடர் மூன்று புதிய ப்ரவுன் நிறங்களை அறிமுகப்படுத்துகிறது: தென்னிந்திய ஃபில்டர் காபியின் அடர்ந்த நிறத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட ‘ஃபில்டர் காபி ப்ரவுன்’ (Filter Kaapi Brown); இந்திய தேநீரின் நளினமான கலவையிலிருந்து பெறப்பட்ட ‘சாய் லேட்டே ப்ரவுன்’ (Chai Latte Brown); மற்றும் இலவங்கப்பட்டையின் இயற்கை நிறத்தைப் பிரதிபலிக்கும் ‘ஸ்பைஸ்டு சினமன் ப்ரவுன்’ (Spiced Cinnamon Brown). ஒவ்வொரு நிறமும் ஒரு தனித்துவமான இந்தியக் கதையைச் சொல்வதோடு, இந்தியர்களின் தோற்றத்திற்குப் பொலிவூட்டும் அடர்ந்த, பளபளப்பான நிறத்தையும் வழங்குகிறது.
இந்தத் தயாரிப்புத் தொடரின் மூலம், ‘L’Oréal Paris’ தனது சர்வதேச அழகு பராமரிப்பு நிபுணத்துவத்தை நாட்டின் அனைத்துத் தரப்பு நுகர்வோருக்கும் உகந்ததாக மாற்றுவதோடு, இன்றைய அழகு சார்ந்த உரையாடல்களை வடிவமைக்கும் இந்திய தனிநபர்களையும் கலாச்சாரத்தையும் கொண்டாடுகிறது.
இந்த லிமிடெட்-எடிஷன் தயாரிப்புகள் பண்டிகை கால தோற்றங்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டவை. அதேசமயம், இது L’Oréal Paris-ன் ‘கிளைகோலிக் க்ளாஸ் காம்ப்ளக்ஸ்’ (Glycolic Gloss Complex) செறிவூட்டப்பட்ட, அமோனியா இல்லாத நம்பிக்கையான ‘காஸ்டிங் க்ரீம் க்ளாஸ்’ ஃபார்முலாவைக் கொண்டுள்ளது. இது தலைமுடிக்கு 5 மடங்கு கூடுதல் பளபளப்பையும், ஆரோக்கியமான தோற்றத்தையும் தருவதோடு, வீட்டிலேயே பார்லர் போன்ற ஹேர் கலரிங் அனுபவத்தையும் வழங்குகிறது.
இந்த தனித்துவமான அறிமுகமானது, இந்திய கலாச்சாரத்தில் வேரூன்றிய, தனிப்பட்ட முறையில் மக்களின் விருப்பத்திற்கு உகந்த அழகு அனுபவங்களை உருவாக்குவதில் L’Oréal நிறுவனத்திற்கு இருக்கும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.
