எஸ். ஆஸ்டின், எம்.எல்.ஏ.,
தொட்டால் விடமாட்டேன் – தொடவும் விட மாட்டேன் – டேபிள் மேல ஃபைல்ஸ் வச்சு இருக்கேன்’ என்று வண்டி வண்டியாக Reels Dialog பேசி Scene ஓட்டிய டம்மி முதலமைச்சரின் ஆட்சியில், அவரது துறையிலேயே, பணி முடிந்த பிறகு டெண்டர் விடுவது எனும் அரியவகை ஊழல் அம்பலமாகி இருக்கிறது. தாம்பரம் மாநகராட்சியில் ரூ.45 லட்சம் மதிப்பிலான பணிகளில் டெண்டர் முறைகேடு நடந்திருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. Powder அமைச்சர் சரத்குமார் தாம்பரத்தில் கடந்த ஜுலை மாதமே திறந்து வைத்த Ashoka Stupa சிலைக்கு ஆகஸ்ட் மாதத்தில் டென்டர் விட்டு சாதனை படைத்திருக்கிறது தூய ஆட்சி. அதுமட்டுமின்றி, சித்தலபாக்கம் ஏரியில் Save Water சிலையை ஆகஸ்ட் 10-ஆம் தேதி Powder அமைச்சர் திறந்து வைத்துள்ளார். ஆனால், அந்தப் பணிக்கான டென்டர் விண்ணப்பம் சமர்ப்பிக்க ஆகஸ்ட் 24-ஆம் தேதி வரை காலக்கெடு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. ஒரு பக்கம் முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை, சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியாமல் திணறுகிறது – இன்னொரு பக்கம் முதலமைச்சரின் கீழ் உள்ள நகராட்சி நிர்வாகத்துறை ஊழலில் திளைக்கிறது. இது தான் இவர்கள் சொன்ன மாற்றமா? தன்னுடைய துறைகளையே சரியாக நிர்வகிக்க வக்கற்ற முதலமைச்சர், தமிழ்நாட்டை எப்படி வளர்த்தெடுப்பார்? முதலமைச்சரின் துறையில் நடந்துள்ள இந்த ஊழல் முறைகேடு தொடர்பான விசாரணையை லஞ்ச ஒழிப்புத்துறை உடனே தொடங்க வேண்டும். இதில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும். இல்லையெனில், ஆளுங்கட்சியின் இந்த ஊழலுக்கு எதிராக தி.மு.கழகம் களத்தில் இறங்கி போராடும்.
