பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மனிஷ் சௌத்ரி, வ/32, என்பவர் கடந்த 3
மாதங்களாக சென்னை, நீலாங்கரை, பாலவாக்கம் பகுதியில் தங்கி, கொத்தனார்
வேலை செய்து வருவதாகவும், கடந்த 09.09.2026 அன்று இரவு, பொருள்
வாங்குவதற்காக, வீட்டினருகே உள்ள மளிகை கடைக்கு சென்றபோது, கடையில்
பொருள் வாங்கி கொண்டிருந்த அஸ்லாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நபர்
வழிவிடாமல் நின்றதால், கொஞ்சம் தள்ளி நிற்குமாறு கூறியதாகவும், அப்போது
இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரையொருவர் கைகளால்
தாக்கிக் கொண்டபோது அருகிலிருந்தவர்கள் விலக்கி விட்டதாகவும், பின்னர்
மனிஷ் சௌத்ரி அங்கிருந்து கிளம்பி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது,
அவரை பின்தொடர்ந்து வந்த மேற்படி நபர், மனிஷ் சௌத்ரியை ஆபாசமான
வார்த்தைகள் பேசி, பிளேடால் தாக்கிவிட்டு, தப்பிச் சென்றதாகவும், தாக்குதலில்
இரத்த காயமடைந்த மனிஷ் சௌத்ரி, இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில்
உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வரும் நிலையில், மருத்துவமனையில் இருந்து
மனிஷ் சௌத்ரி கொடுத்த புகாரின்பேரில், J-8 நீலாங்கரை காவல் நிலையத்தில்,
வழக்குப் பதிவு செய்து போலீசார் மேற்கொண்டனர்.
J-8 நீலாங்கரை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல்
குழுவினர் தீவிர விசாரணை செய்து, மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட
அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த எதிரி 1.சம்பாக் சாய்கியா, வ/32, அறிஞர் அண்ணா
நகர், சோழிங்கநல்லூர், சென்னை என்பவரை நேற்று (10.09.2026) கைது
செய்தனர். அவரிடமிருந்து பிளேடு போன்ற சிறிய கத்தி பறிமுதல் செய்யப்பட்து.
கைது செய்யப்பட்ட எதிரி சம்பாக் சாய்கியா விசாரணைக்குப் பின்னர்
நேற்று (10.09.2026) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி
சிறையில் அடைக்கப்பட்டார்.
