hello madras mobile banner 1200x300

பூக்கடை பகுதியில் பேருந்தில் வங்கி ஊழியரின் செல்போனைதிருடிச்சென்ற இளஞ்சிறார் சிறார் நீதிகுழுமத்தில் ஆஜர். செல்போன் மீட்பு.

சென்னை, வடபழனி, பகுதியில் வசித்து வரும் ராஜ்குமார், வ/27,
த/பெ.கோபி என்பவர் நுங்கம்பாக்கம் SBI வங்கியில் நெட்வொர்க் இஞ்சினியராக
வேலை செய்து வருவதாகவும், இன்று (05.09.2026) காலை ராஜிவ்காந்தி அரசு
மருத்துவமனை பேருந்து நிறுத்ததிலிருந்து வடபழனி செல்வதற்கு தடம் எண்.17 K
மாநகர பேருந்தில் ஏறி டிக்கெட் எடுப்பதற்கு தனது பாக்கெட்டை பார்த்தபோது
அவரின் பாக்கெட்டில் வைத்திருந்த Oneplus செல்போனை யாரோ
திருடிச்சென்றது தெரியவந்தது. மேற்படி செல்போன் திருட்டில் ஈடுபட்ட நபரை
கண்டுப்பிடித்து, தனது செல்போனை மீட்டுத் தருமாறு ராஜ்குமார் என்பவர் C-1
பூக்கடை காவல் நிலைய குற்றப்பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார்
வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
C-1 பூக்கடை காவல் நிலைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர்
தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, மேற்படி
செல்போன் திருட்டில் ஈடுபட்ட 16 வயது இளஞ்சிறரிடம் காவல்குழுவினர்
விசாரணை செய்தனர். அவரிடமிருந்து புகார்தாரரின் Oneplus செல்போன்
மீட்கப்பட்டது. மேலும் விசாரணையில் சிறுவன் பேருந்தில் கூட்ட நெரிசலை
பயன்படுத்தி மேற்படி ராஜ்குமாரிடம் செல்போனை திருடியது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட இளஞ்சிறார் விசாரணைக்குப் பின்னர், இன்று
(05.09.2026) சிறார் நீதிகுழுமத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »