cropped tmk hmm logo

புனிததோமையர் மலை காவல் மாவட்டத்தில் 2வது மனைவியின் 12 வயது மகளிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்ட நபர் போக்சோ சட்டத்தில் கைது.

சென்னை பெருநகர காவல், புனித தோமையர் மலை மாவட்டத்தில் 30 வயது பெண்மணி, அவரது கணவரை 6 வருடங்களுக்கு முன் பிரிந்து, கண்ணன் என்பவருடன் சேர்ந்து மேற்படி முகவரியில் கணவன், மனைவியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், மேற்படி வீட்டில் வசித்து வரும் கண்ணன், அந்த பெண்மணியின் 12 வயது மகளிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாக, அந்த பெண்மணி W-32 மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

W-32 மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் குற்றம் சாட்டப்பட்ட கண்ணன் என்பவரை பிடித்து விசாரணை செய்ததில், கண்ணன், மேற்படி பெண்ணுடன் சுமார் 6 வருடங்களாக கணவன், மனைவியாக வசித்து வந்ததும், அந்த பெண்ணின் 12 வயது மகளிடம் பலமுறை பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

அதன் பேரில், W-32 மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து எதிரி கண்ணன், வ/38, த/பெ.ஜெயச்சந்திரன், ஐயப்பன்தாங்கல், சென்னை என்பவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட எதிரி கண்ணன் நேற்று (03.03.2022) விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »