cropped tmk hmm logo

தனுஷ் – வெங்கி அட்லூரி – சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் & ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணையும் இருமொழி திரைப்படம் ‘வாத்தி ‘ (தமிழ்) / ‘SIR’ (தெலுங்கு) பூஜையுடன் துவங்கியது .

பல வெற்றி படங்களை தயாரித்த முன்னணி தயாரிப்பு நிறுவனமான   சித்தாரா  என்டர்டெயின்மென்ட்ஸ் அடுத்ததாக  இரண்டுமுறை தேசிய விருது பெற்ற நடிகர் ‘தனுஷ்’ உடன் இணைந்து ‘வாத்தி’ (தமிழ்) / ‘SIR’ (தெலுங்கு ) என்ற தெலுங்கு மற்றும் தமிழில் புதிய இருமொழித் திரைப்படம் ஒன்றை தயாரிப்பதாக சமீபத்தில் அறிவித்தனர் .

ஐதராபாத்தில் உள்ள ராமாநாயுடு ஸ்டுடியோவில் இன்று காலை 10.19 மணிக்கு படத்தின் பூஜை நடைபெற்றது.  படக்குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் இயக்குநர் திரிவிக்ரம் ,தயாரிப்பாளர்கள் KL நாராயணா, ML குமார் சௌத்ரி, S . ராதாகிருஷ்ணா (chinnababu) தவிர சுரேஷ் சுக்கப்பள்ளி, நர்ரா ஸ்ரீனிவாஸ் மற்றும் மகேந்திரா (MD, பிரகதி பிரிண்டர்ஸ்) ஆகியோர் கலந்துகொண்டனர் .

திரைக்கதையை ஹாரிகா அண்ட் ஹாசினி கிரியேஷன்ஸின் எஸ் ராதாகிருஷ்ணா (Chinnababu) குழுவினரிடம் ஒப்படைத்தார், படத்தின் முதல் கிளாப்பை திரிவிக்ரம் அடிக்க ,சுரேஷ் சுக்கப்பள்ளி கேமராவை இயக்கினார்.

சூர்யதேவரா நாக வம்சியின்  சித்தாரா  என்டர்டெயின்மெண்ட்ஸ் இந்தப் படத்தை சாய் சௌஜன்யாவுடன் (ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ்) தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க உள்ள இப்படத்தில் மலையாள நடிகை சம்யுக்தா மேனன் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சாய் குமார், தணிகெல்லா பரணி மற்றும் , நர்ரா ஸ்ரீனிவாஸ்  பலர் நடிக்கிறார்கள். சூது கவ்வும், சேதுபதி, தெகிடி, மிஸ்டர் லோக்கல், மாறா போன்ற படங்களில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளர் நவின் நூலி இப்படத்திற்கு படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார் .பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறர்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 5 ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்குகிறது .

எழுத்து & இயக்கம் : வெங்கி அட்லூரி
தயாரிப்பு நிறுவனம் : சித்தாரா  என்டர்டெயின்மென்ட்ஸ்  & ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ்
தயாரிப்பாளர்கள்: நாக வம்சி .S – சாய் சௌஜன்யா
நிர்வாகத் தயாரிப்பாளர்: எஸ். வெங்கடரத்தினம் (வெங்கட்)
தயாரிப்பு வடிவமைப்பாளர்: அவினாஷ் கொல்லா
எடிட்டர்: நவின் நூலி
ஒளிப்பதிவாளர் : தினேஷ் கிருஷ்ணன்
இசை: ஜி.வி.பிரகாஷ் குமார்
வழங்குபவர்: PDV பிரசாத்
மக்கள் தொடர்பு : லக்ஷ்மி வேணுகோபால் ,  ரியாஸ் கே அஹ்மத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »