சென்னை – 18 நவம்பர், 2026 இந்தியாவின் நகரங்களுக்கு இடையிலான மின்சாரப் பேருந்துப் போக்குவரத்து நிறுவனமான ஃபிரெஷ் பஸ் (Fresh Bus), பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும், பேருந்துகளைப் பொறுப்புடன் பராமரிக்கும் நடைமுறையை ஊக்குவிக்கவும், சிறந்த முறையில் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்களைப் பாராட்டி அங்கீகரிக்கவும் ஆண்டுதோறும் வழங்கப்படும் சிறந்த ஓட்டுநர் விருதை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தகுதிபெறும் ஓட்டுநர்களுக்கு ரூ.1 லட்சம் வரை பரிசுத் தொகை வழங்கப்படும்.
இந்த விருதுக்கான ஆண்டுத் தேர்வுக் காலம், 2026ஆம் ஆண்டு விஜயதசமி முதல் 2027ஆம் ஆண்டு விஜயதசமி வரை, அதாவது 2026 அக்டோபர் 20 முதல் 2027 அக்டோபர் 9 வரை நடைபெறும். இதன்படி, பாதுகாப்பான பேருந்து இயக்கம் மற்றும் வாகனப் பராமரிப்பு தொடர்பான ஆவணப்படுத்தப்பட்ட பதிவுகள், சரிபார்க்கப்பட்ட தரவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் 100 மதிப்பெண்கள் கொண்ட மதிப்பீட்டு முறையில் ஓட்டுநர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இதில், முழுமையாக 100 மதிப்பெண்கள் பெறும் ஓட்டுநர்களுக்கு ரூ.1 லட்சமும், 85 முதல் 99 மதிப்பெண்கள் பெறுவோருக்கு ரூ.75,000-மும், 70 முதல் 84 மதிப்பெண்கள் பெறுவோருக்கு ரூ.50,000-மும் வழங்கப்படும். தகுதிபெறும் ஓட்டுநர்களின் எண்ணிக்கைக்கு எந்தவித உச்சவரம்பும் கிடையாது. 500-க்கும் மேற்பட்ட ஓட்டுநர்களைக் கொண்டுள்ள இந்நிறுவனம், தேர்வு செய்யப்படும் தகுதியான ஓட்டுநர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து ஆண்டுதோறும் ரூ.5 கோடிக்கும் அதிகமாகப் பரிசுத் தொகை வழங்க வாய்ப்புள்ளது. விருது பெறுவோருக்குச் சான்றிதழ்களும் வழங்கப்படுவதுடன், அந்தந்தப் பணிமனைகளில் அவர்களின் சாதனைகள் காட்சிப்படுத்தப்பட்டு பாராட்டப்படும்.
இதுகுறித்து ஃபிரெஷ் பஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி சுதாகர் சிர்ரா கூறுகையில், "பயணிகளின் பாதுகாப்பே ஃபிரெஷ் பஸ் நிறுவனத்தின் முதன்மையான நோக்கமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு பயணத்திலும் மிகுந்த கவனத்துடனும் பொறுப்புடனும் செயல்படும் எங்கள் ஓட்டுநர்களே இந்த நோக்கத்தை நடைமுறைப்படுத்துகின்றனர். அவர்களின் அர்ப்பணிப்பைப் பாராட்டுவதோடு, பாதுகாப்பான வாகன இயக்கத்தை ஊக்குவித்து அங்கீகரிக்கும் பண்பாட்டை வலுப்படுத்துவதற்கான முயற்சியே இந்தச் சிறந்த ஓட்டுநர் விருது" என்றார்.
