hello madras mobile banner 1200x300

அலுவல் மொழி ஊக்குவிப்பு குறித்து தொலைத்தொடர்புத் துறை சார்பில் அகில இந்திய மாநாடு

சென்னை – 14 நவம்பர், 2026 மத்திய தொலைத்தொடர்புத் துறை சார்பில், அலுவல் பணிகளிலும், நிர்வாகத்திலும் இந்தியை அலுவல் மொழியாகப் படிப்படியாக அதிகம் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் நோக்கில், அகில இந்திய அலுவல் மொழி மாநாடு இன்று (13.11.2026) புதுதில்லியில் நடைபெற்றது.

துறையின் நிதிப் பிரிவு உறுப்பினர் மணீஷ் சின்ஹா தலைமையில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில், துறை சார்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்று, அரசு செயல்பாடுகளில் இந்தியைப் பயன்படுத்துவது குறித்து எடுத்துரைத்தனர்.

முதல் அமர்வில் அலுவல் மொழி பயன்பாடு, வளர்ச்சி, மேம்பாடு குறித்து கருத்துகள் பகிர்ந்துகொள்ளப்பட்டது. இரண்டாவது அமர்வில் இந்தி மொழி தொடர்பான கொள்கைகள், சட்ட விதிகள், பயன்பாடு ஆகியவை குறித்து விளக்கப்பட்டது.

தொலைத்தொடர்புத் துறை, அதன் சார்பு துறைகள் உள்ளிட்டவற்றின் அதிகாரிகள், பணியாளர்கள் மாநாட்டில் பங்கேற்றனர்.

அரசியலமைப்புச் சட்டத்தின் 351-வது பிரிவின் நோக்கத்தின்படி, அரசு நிர்வாகத்தில் இந்தியின் பயன்பாட்டை ஊக்குவிக்க உள்துறை அமைச்சகத்தின் அலுவல் மொழித் துறை தொடர்ந்து மாநாடுகளை நடத்தி வருகிறது. அந்த முயற்சியை முன்னெடுத்துச் செல்லும் வகையில், தொலைத்தொடர்புத் துறை இந்த முதல் அகில இந்திய மாநாட்டை நடத்தியுள்ளது.

Read the full e-paper

Translate »