hello madras mobile banner 1200x300

நாட்டின் அறிவியல் சாதனைகளையும், தொழில்நுட்ப வளர்ச்சிகளையும் எளிய மொழியில் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க

சென்னை – 11 நவம்பர், 2026 நாட்டின் அறிவியல் சாதனைகளையும், தொழில்நுட்ப வளர்ச்சிகளையும் எளிய மொழியில் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.

புவி அமைப்புகள் அறிவியல் குழுமத்தின் இரண்டாவது பொதுக்கூட்டம் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமையில் புதுதில்லியில் நடைபெற்றது. அறிவியல் சாதனைகளையும் தொழில்நுட்ப வளர்ச்சிகளையும் எளிய மொழியில் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று இக்கூட்டத்தில் அவர் வலியுறுத்தினார். அறிவியல் ஆராய்ச்சிகள் குறித்த தகவல்கள் சாமானிய மக்களுக்கும் எளிதல் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் மக்களை மையப்படுத்திய அறிவியல் தகவல்தொடர்பு முறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

தேசிய கடல் வள தொழில்நுட்பக் கழகம் (என்ஐஓடி), இந்திய தேசிய கடல்சார் தகவல் சேவைகள் மையம், புவி அறிவியல் ஆய்வு மையம், இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம், தேசிய துருவ மற்றும் பெருங்கடல் ஆய்வு மையம் ஆகிய ஐந்து முக்கியக் கட்டமைப்புகளின் ஓராண்டுச் செயல்பாடுகள் குறித்து இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. பெருங்கடல் இயக்கம், ஆழ்கடல் ஆய்வுப் பணிகள் குறித்து அமைச்சர் விரிவாக ஆய்வு செய்தார். குறிப்பாக, ஆழ்கடல் மனித ஆய்வுக்கான ‘மத்ஸ்யா- 6000’ திட்டம் மற்றும் இந்தோ-பிரெஞ்சு கூட்டு முயற்சியின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஆழ்கடல் ஆய்வுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. லட்சத்தீவுகளில் குடிநீர்த் திட்டங்கள், கடல்சார் வளங்களைப் பாதுகாத்தல் போன்ற உள்நாட்டுத் தொழில்நுட்பங்களின் முன்னேற்றங்கள் குறித்தும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.

Read the full e-paper

Translate »