hello madras mobile banner 1200x300

அசாமில் வனவிலங்கு கடத்தல் முயற்சி முறியடிப்பு: 3 கிலோ எடையுள்ள யானைத் தந்தங்கள் பறிமுதல்

சென்னை – 11 நவம்பர், 2026 அசாமின் குவஹாத்தி அருகே உள்ள சோனாப்பூர் சுங்கச் சாவடிக்கு அருகில் யானைத் தந்தங்கள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் 2026 நவம்பர் 5 அன்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த ஐந்து நபர்களை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் விசாரித்தபோது, அவர்கள் ஆயுதங்களைக் காட்டி அதிகாரிகளை மிரட்டிவிட்டுத் தப்பியோட முயன்றனர்.

அவர்கள் விட்டுச் சென்ற பையைச் சோதனையிட்ட அதிகாரிகள், அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3.7 கிலோ எடையுள்ள இரண்டு யானைத் தந்தங்களைக் கைப்பற்றினர். வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்ட இந்தத் தந்தங்கள், மேல்விசாரணைக்காக அசாம் மாநில வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன. வனவிலங்குகள் தொடர்பான பொருட்களைக் கடத்தும் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தக் கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று வருவாய் புலனாய்வு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

Read the full e-paper

Translate »