hello madras mobile banner 1200x300

மாலத்தீவில் சிறைபிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட 3 மீனவர்கள் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜனை, நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

தூத்துக்குடி – 11 நவம்பர், 2026 மாலத்தீவில் சிறைபிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளத்தைச் சேர்ந்த.அந்தோணி ராஜ்,.மிக்கேல் சாம்,.அமல்ராஜ் ஆகிய 3 மீனவர்கள் மாவட்ட ஆட்சியர்.விஷு மகாஜன் அவர்கள் இன்று (10.11.2026) தருவைக்குளம் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த மூன்று ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், கடந்த 13.10.2026 அன்று மாலத்தீவு கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர்.

மத்திய மற்றும் மாநில அரசின் தொடர் முயற்சிகளின் அடிப்படையிலும், மாலத்தீவில் உள்ள இந்திய உயர் ஆணையம் ஆகியவற்றின் வாயிலாக சிறைபிடிக்கப்பட்ட 24 மீனவர்களை விடுவித்து, 08.11.2026 அன்று பத்திரமாக தாயகம் திரும்பியுள்ளார்கள். அதில் தருவைகுளத்தைச் சேர்ந்த.அந்தோணி ராஜ்,.மிக்கேல் சாம்,.அமல்ராஜ் ஆகிய 3 மீனவர்கள் மாவட்ட ஆட்சியர்.விஷு மகாஜன் அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் உதவி ஆட்சியர் (பயிற்சி).பாட்டீல் கிருஷ்ணா பபுருவான் ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர்.ஐய்யனார் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் உள்ளனர்.

Read the full e-paper

Translate »