hello madras mobile banner 1200x300

திருவண்ணாமலை: ஏரியில் மூழ்கி பலியானோரின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி – முதல்வர் விஜய்

திருவண்ணாமலை – 11 நவம்பர், 2026 திருவண்ணாமலை, சமுத்திரம் பெரிய ஏரியில் மூழ்கி பலியானவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவியாக ரூ. 3 லட்சத்தை முதல்வர் விஜய் செவ்வாய்க்கிழமை (நவ. 10) அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் வட்டம், ஆணாய்பிறந்தான் கிராமத்தில் இயங்கிவரும் தனியார் பெண் குழந்தைகள் காப்பகத்தின் செவிலியர் தேன்மொழி (வயது 22) மற்றும் அக்காப்பகத்தில் தங்கியிருந்த காரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சிறுமிகள் விஜயலட்சுமி (வயது 16), த/பெ. வெங்கடேஷ், அல்லி (வயது 14), த/பெ. வெங்கடேஷ், பூமிகா (வயது 13), த/பெ. வெங்கடேஷ் மற்றும் நெடுங்கம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வள்ளியம்மாள் (வயது 16), த/பெ. சேகர் ஆகியோர் நேற்று (நவ. 9) காப்பகத்தின் பின்புறமுள்ள சமுத்திரம் கிராம பெரிய ஏரியில் குளிப்பதற்காகச் சென்றபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும். அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும். ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ. 3 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

Read the full e-paper

Translate »