சென்னை – 4 நவம்பர், 2026 சென்னை: தவெக ஆட்சிக்கு வந்ததும் டிஎன்ஈபி-க்கு சொந்தமான மின் உற்பத்தியை 30 சதவீதமாக குறைத்தும், குறைந்தவிலை ஒப்பந்தத்திலுள்ள 1000MW மின்சாரத்தை வாங்காமலும் செயற்கையான மின்தட்டுப்பாட்டை உருவாக்கி அதானியிடம் அதிக விலையில் ஒரு யூனிட் ரூ41-க்கு வாங்க துடிப்பதன் மர்மம் என்ன சிஎம் சார் என முன்னாள் சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக ஆட்சியில் உடன்குடியில் 660×2 MW மின்திட்டத்தையும்,அதன் தேவைக்கு நிலக்கரி கொண்டு வருவதற்கு ரூ13,500 கோடியில் உருவாக்கப்பட்ட சிறு துறைமுகத்தையும் அதானிக்கு அடிமாட்டு விலைக்கு கொடுக்க நினைப்பது அச்சமா? அல்லது ஆந்திராரெட்டிகேங்கின் திட்டமா எனவும் அப்பாவு கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழ்நாட்டுமக்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்களின் கடின உழைப்பால் உருவாக்கப்பட்ட பல இலட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள மின்வாரியத்தை, அதானிக்கு தாரைவார்க்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்பதை மறந்து விடாதீர்கள் CM Sir என்றும் அப்பாவு எச்சரித்துள்ளார்.
