hello madras mobile banner 1200x300

செம்பியம் பகுதியில் வேலை செய்த வீட்டில் வைர வளையல்கள் மற்றும் பணத்தை திருடிய ஊழியர் கைது. 4 சவரன் எடை கொண்ட வைரக்கல் பதித்த

சென்னை – 4 நவம்பர், 2026 2 தங்க வளையல்கள் மற்றும் பணம் ரூ.10,800 மீட்பு.

சென்னை, பெரம்பூர் பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வரும் கௌதம், வ/26, த/பெ.சீனிவாசன் என்பவர் கடந்த 31.10.2026 அன்று இரவு அவரது வீட்டில் பீரோவில் தங்கம் மற்றும் வைர நகைகள் வைத்திருந்ததாகவும், மறுநாள் (01.11.2026) காலை, பீரோவில் பார்த்த போது, 2 வைர வளையல்கள் மற்றும் பணம் ரூ.10,800/- ஆகியவை திருடு போனது தெரியவந்தாகவும், மேலும் அவரது வீட்டில் தங்கி, வேலை செய்து வந்த அக்ஷய் என்பவர் எந்தவொரு தகவலும் கூறாமல் தலைமறைவாகி விட்டதாகவும், மேற்படி அக்ஷய் என்பவரை பிடித்து விசாரணை செய்து, திருடு போன வைர வளையல்கள் மற்றும் பணத்தை மீட்டுத் தருமாறு கௌதம் என்பவர் K-1 செம்பியம் காவல் நிலைய குற்றப்பிரிவில் கொடுத்த புகாரின்பேரில், வழக்குப் பதிவு செய்து, போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

K-1 செம்பியம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை செய்தும், அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தும், மேற்படி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நேபாளத்தைச் பூர்வீகமான கொண்ட எதிரி சன்னி (எ) அக்‌ஷய், வ/19, சூறாம்மாள் தெரு, எழும்பூர், சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து புகார்தாரரின் வீட்டில் திருடிய 4 சவரன் எடை கொண்ட வைரக்கல் பதித்த 2 தங்க வளையல்கள் மற்றும் பணம் ரூ.10,800/- ஆகியவை மீட்கப்பட்டது.

விசாரணையில் எதிரி சன்னி (எ) அக்‌ஷய் என்பவர் மேற்படி புகார்தாரரின் வீட்டில் அவரது மனைவி மற்றும் குழந்தையுடன் தங்கி, வேலை செய்து வந்தபோது, வீட்டில், பீரோவில் வைத்திருந்த 2 வைர வளையல்கள் மற்றும் பணத்தை திருடிக் கொண்டு தப்பிச் செல்ல முற்பட்டபோது பிடிபட்டது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட எதிரி சன்னி (எ) அக்‌ஷய், விசாரணைக்குப் பின்னர் நேற்று (02.11.2026) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

*****

Read the full e-paper

Translate »