hello madras mobile banner 1200x300

அறிவாற்றல் போர் குறித்த இரண்டு நாள் இணையவழி கருத்தரங்கு

சென்னை – 4 நவம்பர், 2026 அறிவாற்றல் போர் குறித்த இணையவழி கருத்தரங்கு புதுதில்லியில் நடைபெற்றது.

2026 நவம்பர் 03 அன்று நிறைவடைந்த இந்த இரண்டு நாள் கருத்தரங்கை ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ், கூட்டுப் போர் ஆய்வுகளுக்கான மையம் ஏற்பாடு செய்திருந்தது.

இதில், விமானப் படைத் தளபதி, ஏர் சீஃப் மார்ஷல் அஷுதோஷ் தீட்சித், சிறப்புரையாற்றினார்.

செயல்பாட்டுத் திறனையும் சூழ்நிலை விழிப்புணர்வையும் மேம்படுத்துவதற்கு அனைத்துத் தரப்பினரிடையேயும் ஒருங்கிணைந்த செயல்பாட்டின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

கருத்தரங்கின் இரண்டாம் நாள் நடைபெற்ற அமர்வில், குறிப்பாக, டிஜிட்டல் ஆளுகை, நெறிமுறைக் கருத்தாய்வுகள், வளர்ந்து வரும் நவீன அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான சட்டக் கட்டமைப்புகளுடன், எதிர் நடவடிக்கைகளுக்கான பயிற்சி, உருவகப்படுத்துதல், திறன் மேம்பாடு ஆகியவற்றின் நம்பகத்தன்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இணையவழித் திறன்கள், செயற்கை நுண்ணறிவு, தகவல் கையாளுதல், உளவியல் செல்வாக்கு ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு, அவை தேசியப் பாதுகாப்பிற்கு ஏற்படுத்தும் சவால்கள் குறித்து விவாதங்கள் இதில் இடம்பெற்றன.

Read the full e-paper

Translate »