hello madras mobile banner 1200x300

நாடாளுமன்றம், மாநில/யூனியன் பிரதேச சட்டமன்றங்களின் பொதுக் கணக்குக் குழு தலைவர்கள் மாநாடு: திருவனந்தபுரத்தில் நவம்பர் 3-ம் தேதி தொடங்கி வைக்கிறார் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

சென்னை – 2 நவம்பர், 2026 நாடாளுமன்றம், மாநில/யூனியன் பிரதேச சட்டமன்றங்களின் பொதுக் கணக்குக் குழுக்களின் தலைவர்கள் மாநாட்டை, மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா அவர்கள், 2026 நவம்பர் 3 அன்று கேரளத்தின் திருவனந்தபுரத்தில் தொடங்கி வைக்கிறார்.

தொடக்க அமர்வில் கேரள முதலமைச்சர் திரு வி.டி.சதீசன் கலந்து கொள்கிறார். மாநிலங்களவைத் துணைத் தலைவர் திரு ஹரிவன்ஷ் உள்ளிட்டோர் இதில் உரையாற்றுகின்றனர்.

நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவர் திரு கே.சி. வேணுகோபால் வரவேற்புரை ஆற்றுகிறார். நாடாளுமன்றம், மாநில/யூனியன் பிரதேச சட்டமன்றங்களின் பொதுக் கணக்குக் குழுக்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் இவ்மாநாட்டில் பங்கேற்பார்கள்.

இரண்டு நாள் மாநாட்டில், 'தணிக்கை, பொறுப்புணர்வு, நல்லாட்சி – பொதுக் கணக்குக் குழுவின் வளர்ந்து வரும் பங்கு' என்ற கருப்பொருளின் அடிப்படையில் விவாதங்கள் இடம்பெறும். இந்த விவாதங்கள், அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்கும், சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக்கொள்வதற்கும், பொதுச் செலவினங்கள் மீதான சட்டரீதியான மேற்பார்வையை உறுதி செய்வதிலும், ஆளுகையில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதிலும் பொதுக் கணக்குக் குழுக்களின் பங்கை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகளை ஆராய்வதற்கும் ஒரு முக்கிய தளத்தை வழங்கும்.

2026 நவம்பர் 4, புதன்கிழமை அன்று, மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா உரையாற்றும் நிறைவு அமர்வுடன் இந்த மாநாடு நிறைவடையும்.

Read the full e-paper

Translate »