hello madras mobile banner 1200x300

ஹரியானா மாநிலத்தின் 60-வது நிறுவன தினம் – குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு பங்கேற்பு

சென்னை – 2 நவம்பர், 2026 குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, இன்று (நவம்பர் 1, 2026) ஹரியானா மாநிலம் உருவாக்கப்பட்டதன் 60-வது ஆண்டு விழாவான 'ஹிரக் ஜெயந்தி' கொண்டாட்ட நிகழ்ச்சிகளில், ஹரியானாவின் குருக்ஷேத்ராவில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், இந்தியாவின் முன்னேற்றப் பயணத்தின் பல்வேறு பரிமாணங்களுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை ஆற்றிய ஹரியானா மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். பகவான் கிருஷ்ணரின் தன்னலமற்ற செயலின் நித்திய செய்தியை உலகம் முழுவதும் பரப்பிய இந்த மண், நவீன யுகத்தில் மனித சாதனைகளின் எண்ணற்ற மைல்கற்களையும் அமைத்துள்ளது என்று அவர் கூறினார். ஹரியானா மக்கள் சுதந்திரப் போராட்டம் முதல் சமூக மாற்றம், ஜனநாயகம், இலக்கியம், அறிவியல் வரை பல்வேறு துறைகளில் அர்த்தமுள்ள பங்களிப்புகளை வழங்கியுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த 10 ஆண்டுகளில், ஹரியானா மாநிலம், மகளிருக்கு அதிகாரமளித்தலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதை குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார்.

இந்திய விளையாட்டு வரலாற்றில், ஹரியானாவைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மதிப்புமிக்க சர்வதேச போட்டிகளில் அபாரமான வெற்றிகளைப் பெற்றுள்ளனர் என்று குடியரசுத் தலைவர் கூறினார். விளையாட்டுத் துறையில் தங்களின் குறிப்பிடத்தக்க சாதனைகளால் தேசத்திற்குப் பெருமை சேர்த்துள்ள ஹரியானாவின் மகள்களை அவர் பாராட்டினார்.

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கிய பயணத்தில் ஹரியானா புதிய உயரங்களை எட்டி வருகிறது என்று குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு தெரிவித்தார்.

Read the full e-paper

Translate »