hello madras mobile banner 1200x300

நம்பிக்கை, சேவை, அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மீது இபிஎஃப்ஓ-வின் 74 ஆண்டுகாலப் பயணம் கட்டமைக்கப்பட்டுள்ளது: மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா

சென்னை – 2 நவம்பர், 2026 ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ (EPFO), தனது 74-வது நிறுவன தினத்தை இன்று (01.11.2026) புது தில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் கொண்டாடியது.

மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா இந்த விழாவிற்குத் தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு மன்சுக் மாண்டவியா, தனது 74 ஆண்டுகாலப் பயணத்தில், இபிஎஃப்ஓ ​​நாட்டின் தொழிலாளர்களுக்கான ஒரு நம்பிக்கைக்குரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது என்பதை எடுத்துரைத்தார். 8 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களின் பங்களிப்புகள் மூலம் திரட்டப்பட்ட ரூ. 32 லட்சம் கோடி நிதியில், இந்த அமைப்பின் மீது வைக்கப்பட்டுள்ள நம்பிக்கை பிரதிபலிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

சமூகப் பாதுகாப்பு என்பது மனிதநேய உணர்வால் வழிநடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திய டாக்டர் மாண்டவியா, ஒவ்வொரு தொழிலாளியையும் தேசத்தைக் கட்டியெழுப்புபவர்களாகக் கருதி, அவர்களுக்கு உரிய மரியாதையையும் கண்ணியத்தையும் அளித்து, அவர்களின் ஒவ்வொரு கவலையையும் குறையையும் கருணையுடனும் பரிவுடனும் அணுக வேண்டும் என்று வலியுறுத்தினார். ஒவ்வொரு அதிகாரியும் கடைநிலைத் தொழிலாளியின் நலனில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

மாறிவரும் காலங்களுக்கு ஏற்ப தகவமைத்துக் கொண்டு, மீள்திறனை வளர்த்து, செயல்முறைகளை மேம்படுத்தி, தொழிலாளர் நலன் சார்ந்த புதுமை முயற்சிகளில் கவனம் செலுத்துமாறு மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Read the full e-paper

Translate »