hello madras mobile banner 1200x300

சண்டிகர் காவல்துறையின் வைர விழா கொண்டாட்டம் – மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா பங்கேற்பு

சென்னை – 2 நவம்பர், 2026 மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, சண்டிகர் காவல்துறை நிறுவப்பட்டதன் வைர விழா கொண்டாட்டங்களில் இன்று (01.11.2026) கலந்துகொண்டதுடன், சண்டிகர் காவல்துறைக்கு குடியரசுத் தலைவர் வண்ணக் கொடி விருது வழங்கும் விழாவில் தலைமை விருந்தினராகவும் பங்கேற்று சிறப்பித்தார்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, சண்டிகர் காவல்துறைக்கு இன்று வழங்கப்பட்ட குடியரசுத் தலைவர் விருது, அதன் 60 ஆண்டுகால சேவை, அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் என்று கூறினார். 1966 முதல் இன்று வரை, சண்டிகர் காவல்துறை இந்த மகத்தான நகரத்தைப் பாதுகாக்க அயராது உழைத்து, அதன் வரலாற்றில் ஒரு பொன்னான அத்தியாயத்தை எழுதியுள்ளது என்று திரு அமித் ஷா குறிப்பிட்டார்.

சண்டிகர் காவல்துறையின் வாகனக் குழுவில் இன்று 141 புதிய வாகனங்கள் இணைக்கப்படுவதாக திரு அமித் ஷா தெரிவித்தார். இது விரைவான செயல்பாடு, தீவிர ரோந்து, நவீன காவல் பணிகள் ஆகியவற்றை கணிசமாக வலுப்படுத்தும் என்று அவர் கூறினார்.

நாட்டிலேயே தனிநபர் அடிப்படையில் அதிக எண்ணிக்கையிலான வாகனங்களைக் கொண்ட நகரம் சண்டிகர் என்றாலும், அந்நகரம் போக்குவரத்து நெரிசல் சிக்கலை எதிர்கொள்ளவில்லை என்று திரு அமித் ஷா குறிப்பிட்டார். சண்டிகர் காவல்துறையின் விரைவு செயல்பாட்டு நேரம் 10 நிமிடங்கள் என்றும், ஒரு இடத்திற்குச் சென்றடைய காவல்துறை எடுத்துக்கொள்ளும் சராசரி நேரம் 4 நிமிடங்கள் என்றும் திரு அமித் ஷா கூறினார்.

Read the full e-paper

Translate »