hello madras mobile banner 1200x300

உறுப்பு மாற்று சிகிச்சை செய்தவர்கள் பங்கேற்ற விளையாட்டுப் போட்டி: குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

சென்னை – 2 நவம்பர், 2026 குடியரசு துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன், இன்று (01.11.2026) புது தில்லியில் உள்ள தல்கதோரா மைதானத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள் பங்கேற்ற தேசிய விளையாட்டுப் போட்டிகள் 2026-ஐத் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர், இந்த விளையாட்டுப் போட்டிகளைத் துணிச்சல், உறுதிப்பாடு, கருணை, வாழ்வின் விலைமதிப்பற்ற கொடை ஆகியவற்றின் கொண்டாட்டம் என்று விவரித்தார். இந்த முக்கியமான முயற்சிக்காக, சிறுநீரகப் பராமரிப்பு அறக்கட்டளை, சர் கங்கா ராம் மருத்துவமனை, சுகாதார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அமைப்பு ஆகியவற்றுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

தன்னலமற்ற சேவை எனும் இந்தியாவின் நாகரிக நெறியை அவர் எடுத்துரைத்தார். உறுப்பு தானத்தை ஒரு 'மகாதானம்' என்று அவர் விவரித்தார். அதன் மூலம் இழப்பைச் சந்திக்கும்போதும் நம்பிக்கை நிலைத்திருக்கும் என்று அவர் கூறினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி தமது 'மனதின் குரல்' உரைகள் மூலம் இந்த விஷயத்திற்குத் தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருவதால், இந்தியாவில் உறுப்பு தான இயக்கம் குறிப்பிடத்தக்க உத்வேகத்தைப் பெற்றுள்ளது என்று குடியரசு துணைத்தலைவர் குறிப்பிட்டார்.

இந்த விளையாட்டுப் போட்டிகள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பெறுபவர்களின் மீள்திறனைக் கொண்டாடுவதாகவும், நவீன மருத்துவத்தின் சக்தியை வெளிப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.

Read the full e-paper

Translate »