hello madras mobile banner 1200x300

சென்னை பெருநகர காவல், சைபர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையில், சாலிகிராமம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் சைபர் குற்றங்கள் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது

சென்னை – 1 நவம்பர், 2026 சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் A.அமல்ராஜ், இ.கா.ப., அவர்களின்‌‌ உத்தரவுப்படி, கூடுதல் காவல் ஆணையாளர், மத்திய குற்றப்பிரிவு அவர்களின் அறிவுரையின்பேரில், சைபர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.K.உஷாராணி தலைமையில் இன்று (31.10.2026‌) காலை, சென்னை, சாலிகிராமம், அருணாச்சலம் ரோடு சாலிகிராமம், Horizone Residence அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் குடியிருப்பாளர்களிடம் சைபர் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் இன்ஸ்டாகிராம், முகநூல், X-(twitter) தளம், Snapchat, மற்றும் வாட்சப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்தும், டிஜிட்டல் கைது, (Digital Arrest), ஆன்லைன் முதலீட்டு மோசடி (Online Investment scam), ஆன்லைன் வர்த்தக மோசடி (Online Trading scam) இணையவழி பின்தொடர்தல் (Cyber Stalking), இணையவழி ஏமாற்றுதல் (Phishing), இணையவழி துன்புறுத்தல் (Cyber bullying) குறித்தும், கடன் செயலி மோசடி, பரிசு மோசடி, (Gift Scam) கூரியர் மோசடி, (Courier Scam), திருமண இணைய மோசடி (Matrinomial Scam), பாஸ் பெயரில் நடைபெறும் பண மோசடி (Boss Scam) உள்ளிட்ட பல்வேறு சைபர் குற்றங்கள் மற்றும் இதர இணையவழி மோசடிகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் பாஸ்வேர்டு, OTP, CVV எண், வங்கிக் கணக்கு எண், தனிப்பட்ட தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள், வீடு மற்றும் பிற முக்கிய விவரங்களை தேவையில்லாமல் சமூக வலைதளங்களிலோ, இணையத்திலோ யாருடனும் பகிராமல் பாதுகாப்புடன் கையாள்வது குறித்தும் அறிவுரைகள் வழங்கப்பட்டன.

மேலும், ஏதேனும் சைபர் துன்புறுத்தல், மிரட்டல் அல்லது இணையவழி மோசடியை எதிர்கொண்டால், சைபர் குற்ற உதவி எண் 1930-ஐ தொடர்புகொள்வது மற்றும் www.cybercrime.gov.in என்ற National Cyber Crime Reporting Portal மூலம் புகார் அளிப்பது குறித்து விளக்கப்பட்டு, சைபர் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநோகிக்கப்பட்டு, நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் பங்கேற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகளும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் குடியிருப்பு நல சங்க நிர்வாகிகள் மற்றும் குடியிருப்பில் வசித்து வரும் முதியவர்கள், ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.

Read the full e-paper

Translate »