hello madras mobile banner 1200x300

வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க பொது நிர்வாக சீர்திருத்தங்கள் அவசியம் : குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தல்

சென்னை – 1 நவம்பர், 2026 வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க பொது நிர்வாக சீர்திருத்தங்கள் அவசியம் என்று குடியரசு துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

புதுதில்லியில் நடைபெற்ற இந்திய பொது நிர்வாக அமைப்பின் 72-வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில், மத்திய இணையமைச்சரும், இந்திய பொது நிர்வாக அமைப்பின் நிர்வாகக் குழுவின் தலைவருமான டாக்டர் ஜிதேந்திர சிங், அதன் தலைமை இயக்குநர் டாக்டர் சுரேந்திர குமார் பாக்டே, பொதுக்குழு, நிர்வாகக் குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், மண்டல, உள்ளூர் கிளைகளின் பிரதிநிதிகள், பிற முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

'தேசிய ஒற்றுமை தினம்', சர்தார் வல்லபாய் படேலின் 151-வது பிறந்த தினத்தையொட்டி இந்த நிகழ்வு அமைந்திருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், 'இந்தியாவின் இரும்பு மனிதர்' என்று போற்றப்படும் சர்தார் படேலுக்கு மரியாதை செலுத்தினார். நூற்றுக்கணக்கான சமஸ்தானங்களை ஒன்றிணைத்து, இந்தியாவை ஒரு தேசமாக உருவாக்கியவர் சர்தார் படேல் என்று அவர் குறிப்பிட்டார்.

2026-ம் ஆண்டில், இந்த அமைப்பு மேற்கொண்ட முக்கியமான நிறுவன சீர்திருத்தங்களுக்குப் பாராட்டுத் தெரிவித்த அவர், குறிப்பாக, மறுவடிவமைப்பு செய்யப்பட்ட 52-வது மேம்பட்ட தொழில்முறைத் திட்டம், கட்டமைக்கப்பட்ட பயிற்சித் திட்டம், மத்திய குடிமைப் பணிகள், மத்திய கணக்குகள் சேவையைச் சேர்ந்த அதிகாரிகளின் பங்களிப்பு ஆகியவற்றைச் சுட்டிக்காட்டினார்.

Read the full e-paper

Translate »