சென்னை – 1 நவம்பர், 2026 சர்தார் வல்லபாய் படேலின் ஒற்றுமை, ஒழுக்கம், நாட்டைக் கட்டமைப்பது குறித்த கொள்கைகளிலிருந்து இளைஞர்கள் உத்வேகம் பெற வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்னன் அழைப்பு விடுத்துள்ளார்.
சர்தார் வல்லபாய் படேலின் 151-வது பிறந்த தினத்தையொட்டி, ‘தேசிய ஒற்றுமை தினம்’ கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘சர்தார் கதை’ நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்தார்.
தேசிய ஒற்றுமை தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்ட அவர், சர்தார் படேலின் வாழ்க்கை, இந்தியாவின் மிகச்சிறந்த தலைவர்களில் ஒருவரின் வரலாறு மட்டுமின்றி, அது இந்தியாவின் ஒற்றுமை, துணிச்சல், நாட்டைக் கட்டமைத்த வரலாறும் அடங்கியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவின் அரசியல் ஒருங்கிணைப்பில் சர்தார் படேல் ஆற்றிய மகத்தான பங்களிப்பை நினைவு கூர்ந்த குடியரசு துணைத் தலைவர், நாடு சுதந்திரம் அடைந்த காலத்தில் மிகப்பெரிய சவால்களை எதிர்கொண்டிருந்ததைச் சுட்டிக்காட்டினார்.
பிரிவினையால் ஏற்பட்ட நிச்சயமற்ற சூழல், 550-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைக்க வேண்டிய அவசியம் என பல்வேறு சவால்கள் இருந்தன. தனது உறுதியான மன உறுதி, சமாதானப்படுத்தும் திறன், நிர்வாகத் திறன், ராஜதந்திரம் ஆகியவற்றின் மூலம், சர்தார் படேல் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பணியை வெற்றிகரமாக முடித்து, ஒருங்கிணைந்த இந்தியா என்ற கனவை நனவாக்கினார். அவரது இந்த அசாதாரண பங்களிப்பிற்காக நாடு என்றென்றும் அவருக்கு நன்றியுடன் இருக்கும் என்று அவர் கூறினார்.
