சென்னை 25, அக்டோபர் 2026: படப்பிடிப்பு முடிந்த பிறகும் சில கதாபாத் திரங்கள் நடிகர்களின் மனதை விட்டு எளிதில் நீங்குவ தில்லை. நடிகை ஸ்ரீதேவிக்கு ‘ஹைக்கூ’ திரைப்படம் அப்படி யொரு அனுபவமாக அமைந்துள்ளது. தெலுங்கில் அறிமுக மான ‘கோர்ட்: ஸ்டேட் வெர்சஸ் நோபடி’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த ஸ்ரீதேவி, யுவராஜ் சின்னசாமி இயக்கத் தில், அக்டோபர் 23 அன்று உலகம் முழு வதும் திரையரங்கு களில் வெளியான ‘ஹைக்கூ’ திரைப் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார் பத்திரிகையாளர்கள், ஊடகத்தினருக்காகத் திரையிடப்பட்ட மு ன்னோட்டக் காட்சிகள் மற்றும் திரையரங்குகளில் படம் பார்த்த ரசிகர் களும் தனது நடிப்பை பாராட்டி வருவது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார் ஸ்ரீதேவி.
படம் குறித்து ஸ்ரீதேவி பகிர்ந்து கொண்டதாவது, “‘ஹைக்கூ’ படத்தில் என்னுடைய கதாபாத் திரம் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என எதிர்பார்த்தேன். நான் எதிர்பார்த்தது போல வே, படத்தின் முன் னோட்டக் காட்சிகளி லேயே, குறிப்பாகப் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்தின ரிடமிருந்தும் ரசிகர் களிடம் இருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஒரு நடிகை யாக நம் பணியை ரசிகர்கள் கொண்டாடு வதுதான் நமக்கு மனநி றைவு தரும். அந்த உணர்வை ‘ஹைக்கூ’ திரைப்படம் வெளியா வதற்கு முன்பும் வெளி யான பின்பும் கொடுத் திருக்கிறது”.
மேலும், “இயக்குநர் யுவராஜ் கதையைச் சொன்னபோதே என் கதாபாத்திரத்தில் உணர்வுப்பூர்வமான பல அடுக்குகள் இருப் பதை உணர்ந்தேன். சில நாட்களில் படப்பிடிப் பை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினா லும், டப்பிங் பணி களை முடித்த பிறகும் கூட அந்தக் கதாபாத் திரத்திலிருந்து என்னால் எளிதாக வெளிவர முடியவில்லை. அந்தக் கதாபாத்திரத்தை இன்னும் என்னுள் சுமந்து கொண்டிருக் கிறேன். அந்த வகை யில், ‘ஹைக்கூ’ திரைப் படத்தில் நடித்த அனுபவம் எனக்கு பொக்கிஷம். இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த தயாரிப்பா ளர்களுக்கும் இயக்கு நருக்கும் உடன் பணி புரிந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்” என்றார்.
