hello madras mobile banner 1200x300

சின்மயா அமிர்தப் பெருவிழா உலகளாவிய மாநாட்டைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

சென்னை 24, அக்டோபர் 2026: பிரதமர் திரு நரேந்திர மோடி நேற்று (23.10.2026) புதுதில்லி யில் உள்ள பாரத் மண்டபத்தில் சின்மயா அமிர்தப் பெருவிழா உலகளாவிய மாநாட் டைத் தொடங்கி வைத் தார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், சின்மயா மிஷன் என்பது வெறும் நிறுவனம் மட்டுமல்ல எனவும் அது பல ஆண்டுகால புனித தீர்மானங்களால் இயக்கப்படும் ஒரு நிலையான அமைப்பு என்றும் குறிப்பிட்டார்.

சுவாமி சின்மயானந் தரை 1993-ம் ஆண்டில் வதோதராவில் தாம் சந்தித்ததைப் பிரதமர் நினைவு கூர்ந்தார். அப்போது அவருடன் இளைஞர் மேம்பாடு குறித்து ஆலோசனை நடத்தியதாக பிரதமர் தெரிவித்தார்.

இந்தியாவின் உணர்வும் விவேகமும் அழியாதவை என்ப தால், அது பல்லாயிரம் ஆண்டுகளாக அறிவை யும் ஞானத்தையும் தேடும் நாடாக நிலைத் திருக்கிறது என்று பிரதமர் தெரிவித்தார். சுவாமி சின்மயானந்தர் ஆன்மீகத்தைப் பற்றி எவ்வளவு தீவிரமாகப் பேசினாரோ, அதே அளவு தேசிய முன்னுரி மைகள் குறித்தும் பேசி னார் என்பதை பிரதமர் எடுத்துரைத்தார். தேச மே நமது கலாச்சாரம், வாழ்வின் அடையாளம் என்ப தால், ஆன்மீக வளர்ச்சி, தனிப்பட்ட வளர்ச்சிக்கும் தேசிய முன்னேற்றத்திற்கும் உந்துசக்தியாக இருக்க வேண்டும் என்று அவர் போதித்தார் என பிரதமர் தெரிவித்தார்.

2015-ம் ஆண்டு சின்மயானந்தரின் நூற்றாண்டு விழாவின் போது வெளியிடப் பட்ட நினைவு நாணயத் தை நினைவு கூர்ந்த பிரதமர், சுவாமிஜியின் வாழ்க்கையானது ஞானம், கர்மம், பக்தி ஆகியவற்றின் ஒரு குறிப் பிடத்தக்க சங்கமமாக இருந்தது என்றார்.

சின்மயா மிஷனால் நிறுவப்பட்ட விரிவான கல்வி கட்டமைப்பைப் பிரதமர் எடுத்துரைத் தார். நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட சின்மயா கல்வி நிறுவ னங்கள் தற்போது லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர் காலத்தை வடிவமைத்து வருவதாக அவர் கூறினார். இந்த நிறுவ னங்களில் மாணவர்கள் நவீன கல்வியைப் பெறு வதோடு, இந்திய விழுமி யங்களையும் கற்றுக் கொள்கிறார்கள் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

இந்தியப் பாரம்பரி யத்தைப் பாதுகாப்பதில் சுவாமிஜியின் வாழ்நாள் அர்ப்பணிப்பை எடுத் துரைத்த பிரதமர், கன்னியாகுமரியில் கடலில் விவேகானந்தர் பாறை நினைவகத்தைக் கட்ட வேண்டும் என்ற ஏக்நாத் ரானடேயின் தீர்மானத்திற்கு சுவாமிஜி உறுதுணை யாக நின்று, அத்திட்டத் திற்கான முதல் நிதிப் பங்களிப்பை வழங்கி யதை நினைவு கூர்ந்தார். அந்த நினைவுச்சின்னம் இப்போது உலக அளவில் கோடிக்கணக் கான மக்களுக்கு உத்வே கத்தின் கலங்கரை விளக்கமாகத் திகழ் கிறது என்றும் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

Read the full e-paper

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »