hello madras mobile banner 1200x300

வளர்ச்சி ஹார்மோன் சிகிச்சையை மலிவு விலையில் அனைவரும் பெறும் வகையில், நோவோ இந்தியா நிறுவனம் Norditropin® FlexPro® -ன் விலையை 35% குறைத்துள்ளது

சென்னை 24, அக்டோபர் 2026: இந்தியாவில் வளர்ச்சி ஹார்மோன் குறைபாட் டினால் பாதிக்கப்பட்ட பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்காக, ‘நோர்டிட்ரோபின் பிளெக்ஸ்ப்ரோ’ மருந்தின் விலையை 35% வரை கணிசமாகக் குறைப்பதாக ‘நோவோ இந்தியா’ இன்று அறிவித்துள்ளது.

இன்று முதல், இந்த நவீன வளர்ச்சி ஹார் மோன் சிகிச்சை, இந்தியாவிற்கென பிரத் யேகமாக நிர்ணயிக் கப்பட்ட புதிய விலை யில், 10 மி.கி மற்றும் 15 மி.கி ஆகிய இரண்டு அளவுகளில் கிடைக் கும். இதில், 10 மி.கி மருந்தின் விலை ரூ.16, 836-லிருந்து ரூ.11,300 ஆகவும் 33% குறைப்பு, 15 மி.கி மருந்தின் விலை ரூ.25,254-லிருந்து ரூ.16,450 ஆகவும் 35% குறைப்பு மாற்றப் பட்டுள்ளது. இதன் மூலம், ஒரு பேனாவிற்கு முறையே ரூ.5,539 மற்றும் ரூ.8,802 வரை சேமிப்பு கிடைக்கிறது.

இந்த முக்கியமான நடவடிக்கை, இந்தியா வி ல் வளர்ச்சி ஹார் மோன் குறைபாடு மற்றும் அது தொடர் பான பாதிப்புகளுடன் வாழும் மக்களுக்கு, அத்தியாவசிய சிகிச்சை களை எளிதில் சென் றடையச் செய்யவும், மலிவு விலையில் கிடைக்கச் செய்யவும் ‘நோவோ’ நிறுவனம் கொண்டுள்ள தொடர்ச் சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாகும்.

நோவோ இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் விக்ராந்த் ஷரோத்ரியா கூறுகை யில், “வளர்ச்சி ஹார் மோன் குறைபாடு என்பது ஒரு அரிதான நாளமில்லாச் சுரப்பி கோளாறாகும். வெளி யிடப்பட்ட மதிப்பீடு களின்படி, இது சுமார் 4,000 முதல் 10,000 குழந்தைகளில் ஒருவரைப் பாதிக்கிறது. நோவோ இந்தியாவில், நாங்கள் புதிய கண்டு பிடிப்புகளை வழங்கு வதிலும், வளர்ச்சி ஹார்மோன் குறைபாட் டுடன் வாழும் ஒவ் வொரு குழந்தைக்கும் தேவையான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்வதிலும் உறுதியாக உள்ளோம். இந்த விலை குறைப்பு, எங்களது அந்த உறுதிப்பாட்டை நேரடியாக வெளிப் படுத்துவதுடன், இந்தியா முழுவதும் உள்ள குழந்தைகளுக் கும் குடும்பங்களுக்கும் வாழ்க்கையை மாற்றக் கூடிய சிகிச்சையை கொண்டு சேர்ப்பதற் கான எங்களது நீண்ட கால இலக்கை மேலும் வலுப்படுத்துகிறது.”

பிட்யூட்டரி சுரப்பி, இயல்பான வளர்ச்சி க்குத் தேவையான அளவு வளர்ச்சி ஹார் மோனைச் சுரக்காத போது, வளர்ச்சி ஹார்மோன் குறைபாடு ஏற்படுகிறது. இந்தக் குறைபாடு பிறப்பி லிருந்தே இருக்கலாம் அல்லது பிற்காலத்தில் ஏற்படலாம். மரபணு அல்லது உடலமைப்பு சார்ந்த கோளாறுகள், பிட்யூட்டரி பகுதியில் ஏற்படும் பாதிப்புகள் போன்றவை இதற்கான காரணங்களாக இருக்க லாம்; இருப்பினும், பல குழந்தைகளில் இதற் கான குறிப்பிட்ட காரணம் கண்டறியப் படுவதில்லை.

Norditropin® FlexPro® என்பது, நீண்டகால சிகிச்சை தேவைப்படும் குழந்தை களுக்காக வடிவமைக் கப்பட்ட, பயன்படுத்த எளிதான, முன்கூட்டி யே நிரப்பப்பட்ட வளர்ச்சி ஹார்மோன் பேனா (க்ரோத் ஹார்மோன் பென்) ஆகும். நீண்டகால சிகிச்சை பயணத்தில் இருக்கும் குழந்தை களும் அவர்களைப் பராமரிப்பவர்களும், இந்தச் சாதனத்தை எளிதாகப் பயன்படுத்த வும், சிகிச்சையைத் தொடர்ந்து முறையாக மேற்கொள்ளவும் ஏது வாக இது உருவாக் கப்பட்டுள்ளது. நோவோ இந்தியா நிறுவனம், உலகத்தரம் வாய்ந்த தனது சிகிச்சை முறைகளை, தேவைப் படும் நபர்களுக்குச் சரியான நேரத்தில் மற்றும் மலிவு விலை யில் கிடைக்கச் செய்வ தற்காக, சுகாதார நிபுணர்கள், தொற்றாத நோய்களால் பாதிக்கப் பட்டவர்கள் மற்றும் அவர்களைப் பராமரிப் ப வ ர் க ளு ட ன் இணைந்து தொடர்ந்து பணியாற்றி வருகிறது.

Read the full e-paper

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »