hello madras mobile banner 1200x300

வெளிநாடுகளில் இந்தியாவை இழிவுபடுத்தும் ராகுல்; காங்கிரசை ஆட்டிப்படைக்கும் தீவிர ‘நக்சல்’ மனநிலை; பிரதமர் மோடி ஆவேச தாக்குதல்…!!

சென்னை 24, அக்டோபர் 2026: மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளிநாடு களுக்குச் சென்று இந்தியாவை அவமதிப் பதாகவும், காங்கிரஸ் கட்சியை நக்சல் சிந்த னையாளர்கள் ஆக்கிர மித்துள்ளதாகவும் பிரதமர் மோடி பகிரங்க மாக சாடியுள்ளார். நாடாளுமன்ற மக்க ளவைத் தேர்தல் முடிவு களுக்குப் பிறகு எதிர்க் கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, வெளிநாட்டுப் பயணங் களின் போது இந்திய ஜனநாயகம் மற்றும் நாட்டின் செயல்பாடு கள் குறித்து பல்வேறு கடு ¬ மயான விமர்சனங் களை முன்வைத்து வந்தார்.

இதற்கு ஆளும் பாஜக தரப்பில் தொடர்ச்சியாக கடும் கண்டனங்கள் எழுந்து வந்தன. இந்த அரசியல் மோதல்களுக்கு மத்தி யில், தலைநகரில் நடை பெற்ற சர்வதேச மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது ராகுல் காந்தியின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடிய அவர், உலகம் முழு வதும் ஒரு புதிய அமைதியை எதிர்நோக் கும் வேளையில், இந்தியாவில் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த கனவு காண்பதாகக் குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், ‘நாட்டின் நற் பெயரைக் கெடுப்பதை யே சிலர் வாடிக்கை யாகக் கொண்டுள் ளனர்.

ªÕளிநாடுகளுக்குச் சென்று நாட்டை அவமதிப்ப தோடு, நமது உள்நாட்டு விவகாரங்களில் வெளி நாட்டினர் தலையிட வேண்டும் என்று கெஞ்சுகின்றனர். ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் இருந்து 1 ஆண்டில் விண்ணில் ஏவப்படும் ராக்கெட்டுகளின் எண்ணிக்கையை விட, காங்கிரஸ் கட்சி தனது தோல்வி அடைந்த தலைவரை மீண்டும் மீண்டும் நிலைநிறுத்த முயற்சிக்கும் எண்ணிக் கையே அதிகமாக உள்ளது’ என்று எள்ளி நகையாடினார், இதன் காரணமாக சுயமாக சிந்திக்கும் திறனையே அக்கட்சி இழந்து விட்டது. காங்கிரஸ் கட்சி தன்னைத்தானே அழித்துக் கொள்வது பற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை’ என்று ஆவேசமாக முழங்கினார். சர்வதேச மாநாட்டில் பிரதமர் மோடி ஆற்றிய இந்த உரை தேசிய அளவில் பெரும் அதிர்வலை களை ஏற்படுத்தி யுள்ளது.

Read the full e-paper

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »