hello madras mobile banner 1200x300

வருஷநாடு கடமலை மயிலை ஒன்றியத்தில் தீவிர வாக்கு பதிவு..

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியத்தில் 8-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கான உள்ளாட்சி இடைத்தேர்தல் இன்று நடைபெற்றது. நான்குமுனை போட்டிகளில்  கவுன்சிலர் பதவியை கைப்பற்ற வேட்பாளர்கள் களம் இறங்கி அனைத்து கிராமங்களிலும் வாக்குகளை சேகரித்து தங்களது வாக்குறுதிகளை கொடுத்து வந்த நிலையில் இன்று நடைபெறுகின்ற உள்ளாட்சி இடைத்தேர்தல் தொப்பையா புரம் உப்புத்துறை முத் தாளம் பாறை கருப்பையா புரம் நரியூத்து ஓட்டணை  உட்பட ஒன்பது இடங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆண்கள் பெண்கள் முதியவர்கள் உட்பட வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்கள் வாக்கினை பதிவு செய்தனர் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »